என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
- வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து ராமதாஸ், தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது. அன்புமணி மேலாளர் சசிகுமார் மூலமாகவே ராமதாஸ் இல்லத்தில் வைபை, சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக ராமதாசின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.






