என் மலர்
வேலூர்
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென பேசியிருந்தார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.
தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், நந்தகோபால், கிரிராஜ், சேகர், மணி, சிவராமன், சந்தோஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி சந்து தெருவை சேர்ந்தவர் ராஜா (28). எலக்ட்ரீசியன், இவரது மனைவி தீபிகா (20). இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மகன் பிரவீன் (1).
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தீபிகா புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.
இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12-ந் தேதி இரவு கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகியோரை தலையில் கற்களை கொண்டு தாக்கினேன். பின்னர் தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.
பின்னர் இருவரின் பிணத்தையும் வீட்டின் அருகே சிறிய அளவில் பள்ளம் தோண்டி புதைத்து, அதன்மேல் விறகுகளை அடுக்கி வைத்து மறைத்துவிட்டேன்.
அவர்களை கொலை செய்யும்போது ஏற்பட்ட ரத்தக்கறைகளை துணிகளால் துடைத்து அவற்றை வீட்டின் அருகிலேயே தீவைத்து எரித்துவிட்டேன் என்று தீபிகா போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஆற்காடு தாசில்தார் வச்சலா மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தீபிகாவை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடையதாக கருதி ராஜாவின் நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. தனியாக தீபிகா இதனை செய்ய முடியாது. மேலும் புதைக்கப்பட்ட பள்ளம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் தீபிகாவுக்கு யாரோ உடந்தையாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தனர்.
ஆனால் தான் மட்டுமே கணவர், குழந்தையை கொன்று புதைத்தேன். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தீபிகா அடித்து கூறி வருகிறார். எப்படி கொலை செய்தேன் என நடித்தும் காட்டியுள்ளார்.
போலீசார் தொடர்ந்து தீபிகா மற்றும் ராஜாவின் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜ பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக நேற்று இரவு பெண் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் குறித்து வேலூர் சமூகநலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கல்யாணி மற்றும் அரக்கோணம் போலீசார் நேற்று இரவு திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை நிறுத்துவதாக உறுதியளித்தனர். இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருவீட்டார் உறவினர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). எலக்ட்ரீசியன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா (20) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு வயது மகன் பிரனீஷ்.
இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று கதறியபடி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்ய வந்துள்ளார்.
அப்போது போலீசார், உங்கள் கணவரை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று சமாதானம் செய்தனர். மேலும் அவர், செல்போன் எண்ணைக் கொடுங்கள், அதை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம் என கேட்டுள்ளனர்.
அதற்கு தீபிகா, எனது கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்து சென்றுவிட்டார் என்று கூறியதுடன், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தீபிகா, நான் எனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகியோரை கொன்று, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார்.
தொடர்ந்து, நேற்றிரவு அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். இரவு 11 மணி ஆகிவிட்டதால், போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.
இதனால் 2 பேரையும் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தை இன்று தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.

அப்போது ராஜாவின் உறவினர்கள் ஆத்திரத்தில் தீபிகாவை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீபிகாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனை கண்டு ராஜாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
முதற் கட்ட விசாரணையில் தீபிகா அவரது கணவரை கல்லால் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம். மையத்தில் நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ? அந்த அளவு ரூபாய் மட்டுமே வரும். ஆனால் அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் வந்தது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டம், அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் எஸ்.ஆர். கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையம் முன்பு குவிந்தனர். பலர் ஏ.டி.எம். எந்திரத்தில் குறைவான தொகையை குறிப்பிட்டு அதிகமான பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம். மைய வாசலில் இருந்த காவலாளியிடம் ஏ.டி.எம். மையத்தை மூட சொன்னார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இதுபோன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்.மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் சரியான விதத்தில் பணம் அளிக்கப்படுகிறதா? என்பதை பலமுறை கணக்கில் எடுத்து அதன்பின்னர் அந்த ஏ.டி.எம். இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணமழை கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள மரிமாணிக்குப்பம் ஊராட்சி ஓம குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆததிரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், குருசிலாபட்டு மற்றும் ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.
இன்று காலை 6 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது.
சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்களும் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சி அளித்தது.
பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு கொண்டு செல்லப்பட்ட போது ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
பின்னர் கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப் பட்டது. சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது.
கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 8 மணிக்கு அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
அப்போது, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கும்.
சிரசு ஊர்வலத்தை யொட்டி குடியாத்தத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
ஆற்காடு:
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சேக் இஸ்மாயில். பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அந்த பீடி கம்பெனிக்கு ஆற்காடு அண்ணம் பாளையம் தெருவில் கிளை ஒன்றும் உள்ளது.
அந்த கிளையில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை மேல்விஷாரம் பைபாஸ் சாலை பெரிய மசூதி எதிரே உள்ள குடோனில் வைத்திருந்தனர். அந்த குடோன் மேற்கூரை முழுவதும் தகர ஷீட்டுகளால் பொருத்தப்பட்டு முன்பக்கம் இரும்பு ஷட்டர் போட்டு பூட்டப்பட்டு இருந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் 200 பெரிய மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் எரிந்து நாசமானது.
சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பீடி இலைகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). எம்.ஆர்.எப். கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களது 4 வயது ஆண் குழந்தை தினேஷ்.
இந்த குழந்தை கடந்த 9-ந் தேதி மாலை வழக்கம் போல் வீட்டின் அருகே வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் அருகே உள்ள இரும்பு மின் கம்பத்தை தொட்டுள்ளான்.
இதில் மின்சாரம் தாக்கி தினேஷ் தூக்கி வீசப்பட்டான். குழந்தை தினேசை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து அரக்கோணம்- திருத்தணி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் பரிதாபமாக இறந்தான். அரக்கோணம் தாலுகா போலீசார் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர்:
மும்பையை சேர்ந்தவர் மணிவண்ணன் என்கிற சுபாஷ் (வயது 53). கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 2017ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டது. புழல் ஜெயிலில் அடைக்கபட்டார். கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு 3-வது பிளாக்கில் அடைக்கபட்டார். அவர் செல்போனை பதுக்கி வைத்து பேசி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை சிறைக்காவலர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் நேற்று முன்தினம் செல்போன் பேட்டரி சிக்கியது. இதனை பயன்படுத்தியது யார் என்பது தெரியவில்லை ஜெயிலுக்குள் சோதனைக்கு பிறகே அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது.
அப்படியிருக்க ஜெயில் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது கோள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஜெயிலில் பல கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யபட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது பற்றி துப்புதுலக்குவதில்லை. நடவடிக்கையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜோலார்பேட்டை:
அரக்கோணத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரெயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தபடுவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு சென்னை-மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளில் சீட்டுகளின் அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூட்டைகளாக 34 மூட்டைகளில் 250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






