search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "godown fire accident"

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் தீயில் எரிந்து நாசமானது.

    ஆற்காடு:

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சேக் இஸ்மாயில். பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அந்த பீடி கம்பெனிக்கு ஆற்காடு அண்ணம் பாளையம் தெருவில் கிளை ஒன்றும் உள்ளது.

    அந்த கிளையில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை மேல்விஷாரம் பைபாஸ் சாலை பெரிய மசூதி எதிரே உள்ள குடோனில் வைத்திருந்தனர். அந்த குடோன் மேற்கூரை முழுவதும் தகர ஷீட்டுகளால் பொருத்தப்பட்டு முன்பக்கம் இரும்பு ‌ஷட்டர் போட்டு பூட்டப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை 6 மணியளவில் அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் 200 பெரிய மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் எரிந்து நாசமானது.

    சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பீடி இலைகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் மதன்லால். இவர் இடையர் பாளையம் அருகே உள்ள ஒரு குடோனில் பழைய பொருட்களை சேர்த்து வைத்து இருந்தார்.

    இந்த குடோனில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. குடோனில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களும் இருந்ததால் பெரும் கரும் புகை உருவானது.

    குடோன் அருகே மரக்கடைகள் உள்ளதால் அக்கடைகளுக்கு தீ பரவும் நிலை ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை அணைக்க முடிந்தது.

    தீப்பிடித்த பழைய பொருட்கள் குடோன் அருகில் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடந்தது. அதற்கு யாரோ தீ வைத்த போது அந்த தீ குடோனுக்கும் பரவி இருக்கலாம் என தெரிகிறது.

    சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×