என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arakkonam boy dies"

    அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). எம்.ஆர்.எப். கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களது 4 வயது ஆண் குழந்தை தினேஷ்.

    இந்த குழந்தை கடந்த 9-ந் தேதி மாலை வழக்கம் போல் வீட்டின் அருகே வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் அருகே உள்ள இரும்பு மின் கம்பத்தை தொட்டுள்ளான்.

    இதில் மின்சாரம் தாக்கி தினேஷ் தூக்கி வீசப்பட்டான். குழந்தை தினேசை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து அரக்கோணம்- திருத்தணி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் பரிதாபமாக இறந்தான். அரக்கோணம் தாலுகா போலீசார் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×