என் மலர்

  செய்திகள்

  ராஜா, குழந்தை பிரனீஷ்.
  X
  ராஜா, குழந்தை பிரனீஷ்.

  ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொன்று புதைப்பு- காதல் மனைவியிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆற்காடு அருகே கணவர் குழந்தைகளை கொன்று புதைத்த காதல் மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  ஆற்காடு:

  ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). எலக்ட்ரீசியன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா (20) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு வயது மகன் பிரனீஷ்.

  இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று கதறியபடி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்ய வந்துள்ளார்.

  அப்போது போலீசார், உங்கள் கணவரை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று சமாதானம் செய்தனர். மேலும் அவர், செல்போன் எண்ணைக் கொடுங்கள், அதை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம் என கேட்டுள்ளனர்.

  அதற்கு தீபிகா, எனது கணவர் செல்போனை வீட்டிலேயே வைத்து சென்றுவிட்டார் என்று கூறியதுடன், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

  இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது தீபிகா, நான் எனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகியோரை கொன்று, வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துவிட்டேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார்.

  தொடர்ந்து, நேற்றிரவு அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். இரவு 11 மணி ஆகிவிட்டதால், போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.

  இதனால் 2 பேரையும் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தை இன்று தோண்டி பார்க்க முடிவு செய்தனர்.

  புதைக்கப்பட்ட இடத்தை தாசில்தார் வத்சலா, டி.எஸ்.பி. கலைச்செல்வன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பானு ஆகியோர் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.


  இதையடுத்து தீபிகாவை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். அவர் கணவர் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்.

  அப்போது ராஜாவின் உறவினர்கள் ஆத்திரத்தில் தீபிகாவை தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தீபிகாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

  இதனையடுத்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனை கண்டு ராஜாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.

  முதற் கட்ட விசாரணையில் தீபிகா அவரது கணவரை கல்லால் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

  ராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தீபிகாவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

  இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×