என் மலர்
வேலூர்
வரலெட்சுமி, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி
8ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியானதும் வகுப்பறையில் அனைவரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.
பழைய முறையில் தேர்வு நடந்தால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் எடுத்தால் போதும்.
பொதுத்தேர்வு வைத்தால் மதிப்பெண் சதவீதம் அதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.
சரஸ்வதி
8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆர்வமுடன் காத்திருந்தேன். 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினால் இந்த தேர்வு 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருந்திருக்கும்.
பொதுத்தேர்வு வைத்திருந்தால் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். தேர்வை ரத்து செய்யாமல் இருந்திருக்கலாம்.
கீர்த்தனா, அரசு பள்ளி 5-ம் வகுப்பு மாணவி
பொதுத்தேர்வு என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆசிரியர்கள்தான் பொதுத் தேர்வு பற்றி எங்களுக்கு கூறினார்கள். வேறு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத வேண்டும்.
எங்களது விடைத்தாள்களை வேறு பள்ளி ஆசிரியர்கள் திருத்துவார்கள்.
மேலும் வேறு பள்ளிக்குச் சென்றுதான் பொதுத்தேர்வு எழுத வேண்டும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

விக்னேஸ்வரன், 5ம் வகுப்பு மாணவன்
பொதுத்தேர்வு ரத்து செய்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மற்ற பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதுவது கடினம்.
தினமும் வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பதால் நடந்து பள்ளிக்கு வந்துவிடுகிறோம். பொதுத்தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்லவேண்டுமானால் எங்களது பெற்றோர் வேறு பள்ளியில் கொண்டு விட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பொதுத்தேர்வு என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்த எங்களுக்கு இது பற்றி விளக்கி கூறினார்கள். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.
காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் விருதம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது24). என்பதும், காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மண்டலவாடி காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி முரளி என்பவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார்.
நேற்று இரவு சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் புகுந்தது. அது கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்தது. இதில் 2 ஆடுகள் இறந்தன. 4 ஆடுகள் படுகாயமடைந்தன. ஒரு ஆட்டை சிறுத்தை தின்று விட்டு சென்றுள்ளது.
இன்று காலை சிறுத்தை கடித்து ஆடு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் சென்று பார்த்தபோது சிறுத்தை கால்தடம் இருந்ததது.
இன்று காலை மண்டலவாடி வனப்பகுதியில் சிறுத்தை சுற்றிதிரிந்தது. அதனை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.
இது தொடர்பாக ஏலகிரி மலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4½ ஆண்டாகிறது. சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் நர்சிங் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நிர்மலா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணமாகி 4½ ஆண்டுகளே ஆன நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்தும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு பெங்களூருவில் இருந்து வெங்கடேசன், கொடைக்கல் கிராமத்திற்கு வந்தார்.
மனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். மனைவி இறந்து விட்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என வெங்கடேசன் அஞ்சியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூருக்கு வந்தார். மனைவி சாவால் மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் அங்குதனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
3 பேரின் உடலும் ரெயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் துண்டு, துண்டாக சிதறி கிடந்தது.
இதுபற்றி தகவலறிந்த வாலாஜா ரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). அதே பகுதியில் டேங்கர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நதியா. 2 மகன்கள் உள்ளனர்.
ரமேஷ் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று இரவு 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை நாட்றம்பள்ளி செல்லும் சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் ரமேஷ் குமார் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இரவு மர்ம நபர்கள் அவரை தலையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனை கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு அங்கிருந்த டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கினர். மேலும் நாட்றம்பள்ளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கூடுதலாக டாஸ்மாக் கடைகள் உள்ளதால் திருட்டு வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பெண்கள் பள்ளி மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது டாஸ்மாக் கடையால் கொலை நடந்துள்ளது.
இதேநிலை நீடித்தால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும். எனவே இந்த கடையை மூடும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர்.
அப்போது போலீசார் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் ரமேஷ்குமார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்களில் மழைநீர் வடிகாலில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுநீரை திறந்து விட்டதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அங்கு ஆய்வு செய்து ரசாயன மாதிரிகளை சேகரித்தனர். விசாரணை முடிந்து குற்றவியல் நடைமுறை சட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மழைநீர் வடிகாலில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையை சுற்றி வெளிப்புறத்தில் இருந்து நீர் உட்புகாமல் கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுத்திகரிக்காத ரசாயன கழிவுநீரை திறந்துவிட்டு மாசு படுத்திய குற்றத்திற்காக ரூ.18.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி மிக அதிகமாக மாசடைந்துள்ள தொழில் பகுதியான ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதன் அடிப்படையில், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் 2 மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியேற்றியதாக கண்டறியப்பட்டது.
இந்த பெரிய நிறுவனங்களின் மீது ரூ.1 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது தவிர ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் 23 சிறு நடுத்தர தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றி மாசுபடுத்துவது கண்டறியப்பட்டது.
இந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 29 தொழிற்சாலைகள் ரூ.6 கோடியே 70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியும் நிபுணர்குழு ஒன்றை அமைத்து முழுமையாக ஆய்வு செய்து சுற்றுச்சூழல் முழுமையான இழப்பீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்களில் மழைநீர் வடிகாலில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுநீரை திறந்து விட்டதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அங்கு ஆய்வு செய்து ரசாயன மாதிரிகளை சேகரித்தனர். விசாரணை முடிந்து குற்றவியல் நடைமுறை சட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மழைநீர் வடிகாலில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையை சுற்றி வெளிப்புறத்தில் இருந்து நீர் உட்புகாமல் கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுத்திகரிக்காத ரசாயன கழிவுநீரை திறந்துவிட்டு மாசு படுத்திய குற்றத்திற்காக ரூ.18.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி மிக அதிகமாக மாசடைந்துள்ள தொழில் பகுதியான ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
இதன் அடிப்படையில், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் 2 மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியேற்றியதாக கண்டறியப்பட்டது.
இந்த பெரிய நிறுவனங்களின் மீது ரூ.1 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது தவிர ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் 23 சிறு நடுத்தர தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றி மாசுபடுத்துவது கண்டறியப்பட்டது.
இந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 29 தொழிற்சாலைகள் ரூ.6 கோடியே 70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியும் நிபுணர்குழு ஒன்றை அமைத்து முழுமையாக ஆய்வு செய்து சுற்றுச்சூழல் முழுமையான இழப்பீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓட்டேரி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கலா.
சீனிவாசன் நேற்று ஒடுகத்தூரில் நடந்த வாரச்சந்தையில் அவர்ளுக்கு சொந்தமான 7 ஆடுகளை விற்பனை செய்தார்.
இதன் மூலம் ரூ. 70 ஆயிரம் பணம் கிடைத்தது. அதனை வீட்டிற்கு கொண்டு வந்தார். இரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
சத்தம் கேட்டு சீனிவாசன் கண்விழித்தார். முகமூடி அணிந்த 6 பேரை கண்டதும் அவர் திடுக்கிட்டு சத்தம் போட முயன்றார்.
அதற்குள் சீனிவாசனை கும்பல் சரமாரியாக தாக்கினர். அவரது தலை, கை, கால் என அனைத்து பகுதியிலும் அடி விழுந்தது. படுகாயமடைந்த அவர் தரையில் சரிந்து விழுந்தார்.
அவரை எழுந்திருக்க முடியாதபடி தாக்கினர். அதை தடுக்க முயன்ற கலாவையும் கீழே தள்ளி அடித்தனர்.
இதில் தம்பதி இருவரும் மயக்கம் அடைந்தனர். கும்பல் கலா அணிந்திருந்த தாலி செயின், கம்மல் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆடு விற்பனை செய்து வைத்திருந்த ரூ 70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலையில் சீனிவாசன் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியினர் மயக்கமாக கிடந்தது தெரியவந்தது.
அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடுகத்தூரில் நடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் சீனிவாசன் ஆடு விற்பனை செய்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர்.
அவரது வீட்டில் பணம் இருப்பதை தெரிந்து துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொள்ளை கும்பல் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் கோட்டை பூங்காவில் காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் 3 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர் .இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் அமிர்தி காட்டில் அரங்கேறியுள்ளது.
வேலூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மாணவியை அமிர்தி பூங்காவிற்கு அழைத்து சென்றார். இதுபற்றி அவரது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
4 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாணவியை அவரது காதலன் அமிர்தி பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரது நண்பர்கள் 3 பேர் தயாராக இருந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர் . அவர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி போராடினார். இதில் அவரது ஆடைகள் கிழிந்தன. தொடர்ந்து மாணவி கூச்சலிட்டார். அப்போது அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
மாணவியின் சத்தம் கேட்டு முதியவர் அருகே ஓடிச் சென்றார். அப்போது கும்பல் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த முதியவர் விறகு வெட்டும் அரிவாளை காண்பித்து வாலிபர்களை எச்சரிக்கை செய்தார். அவர்கள் முதியவரையும் தாக்க முயன்றனர்.
இதனால் ஆவேசம் அடைந்த முதியவர் அவர்களை வெட்டுவதற்காக துரத்தினார். மேலும் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தார்.
காட்டுக்குள் இருக்கும் மலை கிராம மக்கள் தொடர்ந்து விசில் அடித்தால் ஆபத்து என அர்த்தம். விசில் சத்தம் கேட்ட மலைகிராம மக்கள் அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மாணவியை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் ஒரு விறகு கட்டை பிடிபட்ட வாலிபரின் தலையில் தூக்கிவிட்டு அவரை மலை கிராமம் வரை சுமக்க செய்தனர் .மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
செல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் காரில் சென்று மாணவியை மீட்டு சென்றனர். மேலும் வாலிபரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் காப்பாற்றிய முதியவர் யார் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
அமிர்தி பூங்காவில் பாதுகாப்பான இடங்களைத் தவிர காட்டுப்பகுதிக்குள் காதல் ஜோடியினர் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜா:
வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை வெங்கடேசன் வீட்டில் இருந்தார்.
அப்போது அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேச முயன்றார். அப்போது போன் வெடித்து சிதறியது.
இதில் அவரது தலை கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். முதலில் செல்போன் வெடித்து காயமடைந்ததாகவும் பிறகு வீட்டின் அருகே உள்ள கழிவறை அருகே குப்பைக்கு தீ வைத்த போது அதிலிருந்து கெமிக்கல் போன்ற ஒரு பொருள் வெடித்து சிதறி காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த இடத்தையும் போலீசார் பார்வையிட்டனர். அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெங்கடேசன் மாறி மாறி கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.செல்போன் வெடித்ததா? அல்லது கெமிக்கல் வெடித்து சிதறியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மொட்டைமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இறந்த நிலையில் 6 மாத பச்சிளம் குழந்தையின் உடலை கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி வேலூர் தாலுகா போலீசார் மீட்டனர். இது குறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் 3-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்த தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்ய பெற்ற தாயே கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தாயான ஆற்காடு தாழனூர் சத்திரத்தை சேர்ந்த மஞ்சுளா (20) குழந்தையை கொன்ற அவரது கள்ளக்காதலன் வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (வயது 23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு எஸ்.பி பிரேவஷ்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜாமணி மற்றும் மஞ்சுளாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறை போலீசார் மூலம் 2 பேரிடமும் தனித்தனியாக வழங்கப்பட்டது.
வாலாஜா:
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள சிறுவளையம் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆனால் கூட்டம் நடப்பது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்தது.
எனினும் கூட்டம் நடப்பது குறித்து அறிந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தின்போது ஊராட்சி தொடர்பான வரவு செலவு காணிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாலையில் ஊராட்சி அலுவலகம் அருகே சிறுபாளையம்- பனப்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
நெமிலி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி பகுதியில் குடிநீர் சரியாக வழங்கவில்லை, கொசுமருந்து அடிப்பதில்லை என புகார் கூறினர்.
அதற்கு போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதகாக கூறினர். அதைத்தொடர்நது பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே உள்ளது இருங்கூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. மேலும் 100-நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர வேலை வழங்கப்படு வதில்லை என்றும்,
அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டடோர் ஆரணி - செய்யாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதும்ககளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






