search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் வெடித்து"

    • செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது40). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நெல்லையில் வேலை பார்த்து வருகிறார்.

    ஆறுமுகநேரி கணேசபுரத்தில் வசிக்கும் தனது சித்தியின் வீட்டிற்கு இசக்கியப்பன் நேற்று சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் செல்போன் வேகமாக சூடாகியுள்ளது. இதனை உணர்ந்த இசக்கியப்பன் அதனை எடுக்க நினைத்துள்ளார்.

    ஆனால் மறு வினாடியே அந்த செல்போன் பட்டாசு வெடித்தது போன்ற ஓசையுடன் வெடித்து விட்டது. இதனால் சட்டையில் தீ பிடித்து எரிந்ததால் இசக்கியப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
    • பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர். இவரது மனைவி சவுமியா. இவர்களது ஒரே மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8)

    இவள், அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ, தனது தந்தையின் செல்போனை எடுத்து, அதில் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த செல்போன் வெடித்தது. வீட்டில் வெடி வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், பக்கத்து அறைகளில் இருந்த பெற்றோர் ஓடி வந்தனர். அங்கு ஆதித்யஸ்ரீ காயங்களுடன் கிடந்துள்ளார். செல்போன் வெடித்து சிதறி கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், உடனடியாக ஆதித்யஸ்ரீயை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆதித்யஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×