search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yelagiri hills"

    • ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.
    • கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரைச் சேர்ந்தவர் ரத்னாஜெயின் (வயது 50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் நடக்க உள்ளது.

    இதில் ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.

    அதன்படி ஹெலிகாப்டர் திடீரென ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வந்து தரை இறங்கியது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஹெலிகாப்டரை காண அந்த இடத்தில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டரை தரை இறங்கியது குறித்து விளக்கம் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிஇன்றி ஹெலிகாப்டர் தரை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    இது குறித்து அந்த தனியார் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினோம்.

    அதன்படி கல்லூரி முதல்வர் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். இனிமேல் ஹெலிகாப்டரை தரை இறங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×