என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலெட்சுமி - சரஸ்வதி
    X
    வரலெட்சுமி - சரஸ்வதி

    5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- மாணவர்கள் பேட்டி

    5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    வரலெட்சுமி, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி

    8ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியானதும் வகுப்பறையில் அனைவரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

    பழைய முறையில் தேர்வு நடந்தால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் எடுத்தால் போதும்.

    பொதுத்தேர்வு வைத்தால் மதிப்பெண் சதவீதம் அதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.

    சரஸ்வதி

    8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆர்வமுடன் காத்திருந்தேன். 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினால் இந்த தேர்வு 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருந்திருக்கும்.

    பொதுத்தேர்வு வைத்திருந்தால் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். தேர்வை ரத்து செய்யாமல் இருந்திருக்கலாம்.

    கீர்த்தனா, அரசு பள்ளி 5-ம் வகுப்பு மாணவி

    பொதுத்தேர்வு என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆசிரியர்கள்தான் பொதுத் தேர்வு பற்றி எங்களுக்கு கூறினார்கள். வேறு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத வேண்டும்.

    எங்களது விடைத்தாள்களை வேறு பள்ளி ஆசிரியர்கள் திருத்துவார்கள்.

    மேலும் வேறு பள்ளிக்குச் சென்றுதான் பொதுத்தேர்வு எழுத வேண்டும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

    பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சந்தோசமாக உள்ளது எனது அப்பா அம்மாவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    விக்னேஸ்வரன் - கீர்த்தனா

    விக்னேஸ்வரன், 5ம் வகுப்பு மாணவன்

    பொதுத்தேர்வு ரத்து செய்தது ரொம்ப சந்தோ‌ஷமாக உள்ளது. மற்ற பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதுவது கடினம்.

    தினமும் வீட்டின் அருகிலேயே பள்ளி இருப்பதால் நடந்து பள்ளிக்கு வந்துவிடுகிறோம். பொதுத்தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்லவேண்டுமானால் எங்களது பெற்றோர் வேறு பள்ளியில் கொண்டு விட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    பொதுத்தேர்வு என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்த எங்களுக்கு இது பற்றி விளக்கி கூறினார்கள். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.

    Next Story
    ×