search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    சிறுவளையம், இருங்கூரில் அடிப்படை வசதி கேட்டு மறியல்

    சிறுவளையம் மற்றும் இருங்கூரில் அடிப்படை வசதி கேட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    வாலாஜா:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள சிறுவளையம் கிராம சபை கூட்டம் நடந்தது. ஆனால் கூட்டம் நடப்பது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்தது.

    எனினும் கூட்டம் நடப்பது குறித்து அறிந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தின்போது ஊராட்சி தொடர்பான வரவு செலவு காணிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாலையில் ஊராட்சி அலுவலகம் அருகே சிறுபாளையம்- பனப்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    நெமிலி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி பகுதியில் குடிநீர் சரியாக வழங்கவில்லை, கொசுமருந்து அடிப்பதில்லை என புகார் கூறினர்.

    அதற்கு போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதகாக கூறினர். அதைத்தொடர்நது பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே உள்ளது இருங்கூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. மேலும் 100-நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர வேலை வழங்கப்படு வதில்லை என்றும்,

    அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டடோர் ஆரணி - செய்யாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதும்ககளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×