என் மலர்
வேலூர்
வேலூரில் 15 வயது பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
வேலூர் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப்பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவி திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாயார் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், எனது மகளை கொசப்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். எனது மகளை உடனடியாக கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன மாணவியையும், அவரை கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் வாலிபரையும் தேடி வருகிறார்கள்.
ராணிப்பேட்டையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3½ கிலோ தங்கம், 6½ கிலோ வெள்ளிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
வேலூர் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வேலூர் மண்டல இணை முதன்மை பொறியாளராக பணிபுரிபவர் பன்னீர்செல்வம் (வயது 45). வேலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், ஓசூர் ஆகிய பகுதிகள் இவருடைய கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தப்பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்க உரிமம் வழங்குவது, பழைய உரிமங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளை இவர் கவனித்து வந்தார். இந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதற்காக இவர் மாதந்தோறும் கூட்டம் நடத்தி பணம் பெற்று வந்ததாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்பாடியில் அவருடைய தலைமையில் கூட்டம் நடப்பதாகவும், அதில் பண பரிமாற்றம் நடப்பதாகவும் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் கூட்டம் முடிந்து பன்னீர்செல்வம்காரில் வீட்டுக்கு புறப்பட்டு விட்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் காட்பாடியில் உள்ள வீட்டிலும், காரிலும் சோதனை நடத்தினர். அப்போது ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்தை அவர்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை அருகே, ராணி பெல் நகரில், வளையாபதி தெருவில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர் மாலை சுமார் 6.30 மணிவரை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து ரூ2½ கோடி அளவுக்கு பணம், சுமார் 3½ கிலோ தங்கமும், 6½ கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூபாய் எண்ணும் 4 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணம் எண்ணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனையின் முடிவில் பணத்தின் அளவும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அளவும் மேலும் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
காட்பாடி:
காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்து சட்டம் இயற்றி அதனை இந்த ஆண்டே செயல்படுத்த முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்போது தொற்று குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். இது குறித்து முறையாக முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்து சட்டம் இயற்றி அதனை இந்த ஆண்டே செயல்படுத்த முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்பாடியில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவர் நேற்று மாலை அங்குள்ள ரவுண்டானா புத்துக்கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அமுதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்தான். உடனே அமுதா திருடன்... திருடன்... என கத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம ஆசாமி செயினுடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மாணவியின் போலி சான்றிதழ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய அலுவலர் பிரியங்கா, சமூகநல பணியாளர் சாந்தி, சைல்டுலைன் பணியாளர் மணிசேகர் மற்றும் வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கொசப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் நடத்தி வரும் 33 வயது வாலிபருக்கும் வருகிற 26-ந் தேதி திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது. அதையடுத்து சமூக நல அலுவலர்கள் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர். அப்போது 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு முன்பாக திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அப்போது பெண்ணின் வீட்டார் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது என்று பிறப்பு சான்றிதழை காண்பித்தனர். இதுதொடர்பாக சமூக நலஅலுவலர்கள் அந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
அதில் அந்த சான்றிதழ் போலியானது என்பதும், சிறுமிக்கு திருமணம் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே ராணிப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் போலியான சான்றிதழ் பெற்று, அதன் மூலம் வேலூர் மாநகராட்சியில் 13 வயது சிறுமிக்கு தற்போது 19 வயது என்று பிறப்பு சான்றிதழ் பெற்றதும், தற்போது ஆதார் அட்டைக்கும் விண்ணப்பித்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து சமூக நலஅலுவலர்கள் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை காட்பாடி செங்குட்டையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமிக்கு போலி சான்றிதழ் வாங்கியது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியாத்தம் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவரது மனைவி நிர்மலா (வயது 28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் நிர்மலா அதே பகுதியில் உள்ள நிலத்தில் வேர்க்கடலை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அடுக்கம்பாறை:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 350 படுக்கைகள் உள்ள இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அதன்படி இங்கு தற்போது வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

காட்பாடியில் வேன் மோதி மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காட்பாடி:
காட்பாடி வண்டறந்தாங்கல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 48). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காட்பாடி தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு வேன் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் ரகு தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து காட்பாடி போலீசில் ரகுவின் மனைவி லிசிமேரி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தைப் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர்:
வேலூர் ஓட்டேரி அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி கிராமத்தில் சாலையோரம் ராதாருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். நேற்று முன்தினம் புரட்டாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிச் சென்றனர். இதையடுத்து நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டும், அதில் இருந்த நாணயங்கள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். போலீசார் கூறுகையில், உண்டியலில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கத்தில், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம், செதுக்கரை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு மோகன் (38) என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி எம்.வி.குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பத் தனது மனைவியுடன் கடந்தசில ஆண்டுகளாக குடியாத்தம் கள்ளூர் காந்திநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சுலோச்சனாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். சம்பத் மட்டும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையிலிருந்து சம்பத் வீட்டில் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இரவு 10 மணி ஆகியும் இருட்டாக இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்துபார்த்தபோது அங்கு சுலோச்சனா தரையில் பிணமாக கிடந்தார். சம்பத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக எம்.வி.குப்பத்தில் உள்ள அவரது மகன் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுலோச்சனா மற்றும் சம்பத்தின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் சம்பத்தும் அவர் மனைவி சுலோச்சனாவும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளூர் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். சுலோச்சனா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தாலும் படுத்த படுக்கையாகி விட்டார். அதனால் சம்பத் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே சுலோச்சனா இறந்துள்ளார். இதனால் தனக்கு ஆதரவு யாரும் இல்லாததால் இது குறித்து யாருக்கும் தகவல் சொல்லாமல் சம்பத் இருந்துள்ளார். தனது மனைவி இறந்த பிறகு தனக்கு ஆதரவு யாருமில்லையே என்று நினைத்த சம்பத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

குடியாத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் பல இடங்களில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக குடியாத்தம் பிச்சனூர் ஆர்.வி.கோபால் தெருவைச் சேர்ந்த பாபு (வயது 43), வைத்தீஸ்வரன் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (44), காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவைச் சேர்ந்த குமரன் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொய்கை மோட்டூரில் நின்ற கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 46). மினிவேன் டிரைவர். இவர் நேற்று சென்னையில் இருந்து மினி வேனில் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மினிவேனை அவரே ஓட்டினார். கிளீனராக பார்த்திபன் (37) இருந்தார். அவர்களது மினிவேன் வேலூரை நெருங்கிக்கொண்டிருந்தது.
பொய்கை மோட்டூர் பகுதியில் வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மினிவேன் மோதியது. இதில் மின்வேனில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முஸ்தபா அபுதாகிர் என்ற டாக்டர் அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அவர் விபத்தை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, காயமடைந்த இருவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுந்தரம் இறந்து விட்டார். பார்த்திபன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.