என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
குடியாத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் பல இடங்களில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக குடியாத்தம் பிச்சனூர் ஆர்.வி.கோபால் தெருவைச் சேர்ந்த பாபு (வயது 43), வைத்தீஸ்வரன் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (44), காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவைச் சேர்ந்த குமரன் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






