search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு விற்பனை"

    • வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ். நகர், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி(50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரி மங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தரநீஸ் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், மற்றும் 2 கார்கள், ரூ.1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது,
    • லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைதுசெய்தனர்,

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பேருந்து நிலையம், பூதக்கேணி, ஈபி இறக்கம் என பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பவ இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து உள்ளார்கள். விசாரணையில் சிதம்பரம் பாரதிநகர் சி.கொத்தங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (வயது37) , பூதகேணி பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அன்வர்தீன் (63), அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ராமன் மகன் நாகசுந்தரம் (65) ஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மொத்தம் 5 லாட்டரி சீட்டுகள்,2 பில் புக், ரொக்கம் ரூ. 2100 பறிமுதல் செய்தனர்.

    • பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது பொன்னேரி டீக்கடை அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட கேரளா மாநிலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கேரளா மாநில 360 லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள், செல் போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 3 பேரிடம் இருந்து கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு முள்புதரில் மறைந்தபடி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி (58), தாம்பரம் மப்பேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (45), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ×