லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.3 பேரிடம் இருந்து கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு முள்புதரில் மறைந்தபடி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி (58), தாம்பரம் மப்பேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (45), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com