search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver died"

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள நிலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 40). இவர் செங்கல் சூளைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணியாட்களை ஏற்றி க்கொண்டு சிலுவத்தூர் சாலை கம்பிளியம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.
    • தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜகோபால் (வயது 29). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவரது உறவினர் செல்வகுமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். செல்வகுமாரின் சொந்தஊர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் ஆகும்.

    அங்கு தனது குழந்தைகளின் காதணி விழா நடத்தினார். இதற்கு ராஜகோபால் சென்றிருந்தார். அப்போது அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜகோபால் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செல்வம் ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வத்தின் மொபட் மீது மோதியது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(வயது 48). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வழக்கம்போல் மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கிவிட்டு மீண்டும் வேனை பள்ளியில் கொண்டு வந்து நிறுத்தினார். பின்னர் தனது மொபட்டில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

    திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி டிராக்டர் கவிந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறை சந்தியாகப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ்(45). இவர் சிறுமலை செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இரண்டலபாறையில் இருந்து டிராக்டர் ஓட்டிவந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருள்தாஸ் சம்பவஇடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஏட்டு கருணாகரன் தலைமையிலான தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை தாழையூத்து அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் மாயாண்டி.
    • இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் தாழையூத்தில் இருந்து கயத்தாறு சென்றார்.

    கயத்தாறு:

    நெல்லை தாழையூத்து அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் மாயாண்டி (வயது40). இவர் கயத்தாறு பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் தாழையூத்தில் இருந்து கயத்தாறு சென்றார்.

    அவர் அரசன்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்தார்
    • திருமணநாள் பார்ட்டி கொடுப்பதற்காக சென்றுள்ளார்

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மங்காம்பட்டியை சேர்ந்தவா் சரவணன் (வயது 37). டிைரவா். இவரது மனைவி அம்சவள்ளி . இந்ததம்பதிக்கு ேநற்று முன்தினம் திருமணநாள் ஆகும். இதனால் சரவணன் தனது பொலிரோ ஜீப்பில், தனது நண்பர் வேங்கடத்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமணநாள் பார்ட்டி கொடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுக்காம்பட்டியில் உள்ள ஒரு தரிசுக்காட்டில் சரவணனும், மாரிமுத்துவும் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குடிபோதையில் சரவணன் தனது ஜீப்பை இயக்கி உள்ளார். அப்போது கதவை சரியாக மூடாததால் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜீப்பின் சக்கரத்தில் சிக்கி சரவணன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சரவணனுக்கு மகன் மற்றும் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது."

    • சாணார்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக பலியானார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்கார ன்பட்டியை சேர்ந்தவர் மூக்கன்.

    இவரது மகன் பொன்னர் (வயது 30). லாரி டிரைவர்.இவர் நேற்று இரவு அதிகாரிப்பட்டி-வி.எஸ்.கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பொன்னர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்னரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது.
    • காரை ஓட்டிவந்த டிரைவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் யாதவர் திருமணமகால் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(35). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கம்பம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காைர அவரே ஓட்டிச்சென்றார். கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது கம்பத்தில் இருந்து குமுளிநோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.

    இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நவநீதகிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவரான பெரியகுளத்தை சேர்ந்த முத்துராஜ்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர் அருகே கண்டெய்னர் மீது வேன் மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.

    வேடசந்தூர்:

    மதுரையில் இருந்து கரூர் நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் ஸ்ரீராம் (வயது 30). ஓட்டி வந்தார். இந்த வேன் வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை வேன் முந்தி செல்ல முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக வேன் கண்டெய்னரின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ஸ்ரீராம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி அருகே நேற்று இரவு சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்.

    பூந்தமல்லி:

    ஓட்டேரி, செல்வபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிகேசவன் (வயது 23) டிரைவர்.

    இவர் நேற்று இரவு லோடு வேனில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி அருகே இறக்க சென்றார். பின்னர் அவர் பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம் அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஆதிகேசவன் லோடு வேனை சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெரிகிறது. திடீரென வேனின் பின் பக்கத்தில் தீப்பிடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வேனில் இருந்த டிரைவர் ஆதிகேசவனை மீட்க முயன்றனர்.

    இதற்குள் வேன் முழுவதும் எரிந்து தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய ஆதிகேசவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வேனில் பற்றிய தீயை அணைத்தனர்.

    தீயில் சிக்கி பலியான ஆதிகேசவனின் உடல் கிளீனரின் இருக்கை அருகே இருந்தது. டிரைவர் இருக்கை அருகே உள்ள கதவை திறக்காமல் கிளீனர் இருக்கை அருகே உள்ள கதவை எதற்காக அவர் திறக்க முயன்றார் என்பது தெரியவில்லை.

    எனவே திட்டமிட்டு வேனுக்கு தீவைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×