குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழப்பு

குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்தார்திருமணநாள் பார்ட்டி கொடுப்பதற்காக சென்றுள்ளார்
குடிபோதையில் ஜீப்பை இயக்கியபோது தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழப்பு
Published on

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மங்காம்பட்டியை சேர்ந்தவா் சரவணன் (வயது 37). டிைரவா். இவரது மனைவி அம்சவள்ளி . இந்ததம்பதிக்கு ேநற்று முன்தினம் திருமணநாள் ஆகும். இதனால் சரவணன் தனது பொலிரோ ஜீப்பில், தனது நண்பர் வேங்கடத்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமணநாள் பார்ட்டி கொடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுக்காம்பட்டியில் உள்ள ஒரு தரிசுக்காட்டில் சரவணனும், மாரிமுத்துவும் அமர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக குடிபோதையில் சரவணன் தனது ஜீப்பை இயக்கி உள்ளார். அப்போது கதவை சரியாக மூடாததால் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜீப்பின் சக்கரத்தில் சிக்கி சரவணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சரவணனுக்கு மகன் மற்றும் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது."

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com