என் மலர்
நீங்கள் தேடியது "டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி"
- க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றபோது பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது.
- படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
கம்பம் ஆலமர தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(50). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும் உள்ளனர். சரவணக்குமாருக்கு திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்த நாகராஜ் கிடைக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்தநிலையில் க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றார். பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி டிராக்டர் கவிந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறை சந்தியாகப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ்(45). இவர் சிறுமலை செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
இரண்டலபாறையில் இருந்து டிராக்டர் ஓட்டிவந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருள்தாஸ் சம்பவஇடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஏட்டு கருணாகரன் தலைமையிலான தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






