கோப்பு படம்.
கோப்பு படம்.

ஆண்டிபட்டி அருகே கிணற்றில் மூழ்கி கோவை டிரைவர் பலி

அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரிழந்தார்.
Published on

ஆண்டிபட்டி:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜகோபால் (வயது 29). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவரது உறவினர் செல்வகுமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். செல்வகுமாரின் சொந்தஊர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் ஆகும்.

அங்கு தனது குழந்தைகளின் காதணி விழா நடத்தினார். இதற்கு ராஜகோபால் சென்றிருந்தார். அப்போது அருகில் இருந்த கிணற்று கரையில் நின்றிருந்தவர் திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜகோபால் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com