கூடலூரில் கார் மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி

கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது.காரை ஓட்டிவந்த டிரைவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் பலியான நவநீதகிருஷ்ணன்.
விபத்தில் பலியான நவநீதகிருஷ்ணன்.
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் யாதவர் திருமணமகால் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(35). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கம்பம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காைர அவரே ஓட்டிச்சென்றார். கூடலூர்-கம்பம் நெடுஞ்சாலையில் செல்வபுரம் பிரிவு அருகே சென்றபோது கம்பத்தில் இருந்து குமுளிநோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.

இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நவநீதகிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவரான பெரியகுளத்தை சேர்ந்த முத்துராஜ்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com