சாணார்பட்டி அருகே வாகனம் மோதி டிரைவர் பலி

சாணார்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக பலியானார்.கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்கார ன்பட்டியை சேர்ந்தவர் மூக்கன்.

இவரது மகன் பொன்னர் (வயது 30). லாரி டிரைவர்.இவர் நேற்று இரவு அதிகாரிப்பட்டி-வி.எஸ்.கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பொன்னர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்னரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com