என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
காட்பாடியில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
காட்பாடியில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவர் நேற்று மாலை அங்குள்ள ரவுண்டானா புத்துக்கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, அமுதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்தான். உடனே அமுதா திருடன்... திருடன்... என கத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம ஆசாமி செயினுடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story