என் மலர்

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    காட்பாடியில் வேன் மோதி மருத்துவமனை ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காட்பாடியில் வேன் மோதி மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காட்பாடி:

    காட்பாடி வண்டறந்தாங்கல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 48). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    காட்பாடி தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு வேன் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் ரகு தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து காட்பாடி போலீசில் ரகுவின் மனைவி லிசிமேரி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தைப் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×