என் மலர்
திருவள்ளூர்
- கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (வயது25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு ஒரகடம் அய்யப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் நண்பர்களுடன் நடுரோட்டில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இதனை ஆட்டோ டிரைவர் காமேஷ் கண்டித்தார். மேலும் ஆட்டோ செல்ல வழிவிடுமாறு கூறினார். இதனால் கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.
ஆத்திரம் அடைந்த கவுதம் தரப்பினர் மறைத்து வைத்துருந்த கத்தி, அரிவாளால் காமேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த காமேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம்கேட்டு அப்பகுதிக்கு வந்த காமேசின் தம்பி சதீசையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட காமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த சதீஷ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கவுதமுடன் அவரது நண்பர்கள் 10 பேர் இருந்ததாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாடத்தின் போது ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
- அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த ஞாயிறு அருமந்தை கிராமம் மேடங்குளம் பகுதியில் வசித்து வந்தவர் அமிர்தலிங்கம் (வயது48).கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் வீடும் பூட்டப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் அவரது நண்பர்கள் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் அமிர்த லிங்கம் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.
இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அமிர்தலிங்கம் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- கடக லக்னத்தில் பந்தகால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
- சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முதல் 14 வாரங்கள் தொடர்ந்து ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச் சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்திரு விழா ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா தலைமையில் கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
ஆடிமாதம் முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் வாகன வசதி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
- தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
- பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்.
- கைதானவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதிகளில் செங்கல் சூளை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களிடம் ரவுடி கும்பல் பணம்கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்தது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் கூட்டாளிகளான விஷ்வா, மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யாவின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டுக்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி அங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அரியன்வாயல் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கத்தினர் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பகுதி காட்டூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரியன்வாயல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் குப்பைகளை கொட்டுவதற்கு பதிலாக வேறு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர். போராட்டத்தின் போது அவ்வழியாக தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யாவின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
- ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.
பூந்தமல்லி:
பருவமழை தீவிரம் அடையும் போது போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் காரணமாக அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.
மழை காலத்தில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மழை நீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.
தற்போது அதே பகுதியில் மீண்டும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
இந்த முறையில் சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும். ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.
இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.
தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சந்தீப்சக் சேனா ஆய்வு மேற்கொண்டார். தற்போது முடிந்துள்ள பணிகளை விரைந்து முடித்து, இந்த பகுதியின் மேலே தார் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும் போக்குவரத்து தடை செய்யாமலும் தற்போது இந்த பகுதியில் புஷ் அண்ட் துரோ முறையில் கல்வெர்ட்டை அமைத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
- சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
சென்னை, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம், பெரியபாளையம், வெங்கல் கூட்டு ரோடு வழியாக செல்கிறது.
இந்நிலையில் பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலை பணிக்காக கிராமத்தில் உள்ள பிற பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய உள் வட்டச் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் வந்து செல்ல முடியாத வகையில் நிரந்தர தடை ஏற்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்பகு தியில் முதலில் சுரங்கப்பாதை அமைத்து, அதன் பின்னர் 6 வழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சுரங்கப்பாதை அமைக்காமல் சாலைப்பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பி டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைப் பணியையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ.ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கடிதம்மூலம் உறுதிமொழி அளித்தனர். இதன்பின்னர் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது.
- தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் கவரப்பேட்டை தெலுங்கு காலனி சாலை, ரூ.37 லட்சத்தில் கவரப்பேட்டை ரெயில்வே நிலைய சாலை, ரூ.43 லட்சத்தில் பெருவாயல் ஊராட்சி நயினாங்குப்பம் சாலையும்,ரூ.1கோடியே 8 லட்சத்தில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செய லாளர் கே.இ. திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி கெஜா, தி. மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பொறியாளர்கள் மணிமேகலை, செல்வராஜ் கலந்து கொண்டனர்.
- ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார்.
- பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரத்ததான முகாம் பொன்னேரி நகர பாஜக சார்பில் நடைபெற்றது. பிரானதா சக் ஷம், சேவா பாரதி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார் ஏற்பாடு செய்தார். பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் குமார், அன்பாலாயா சிவகுமார், நந்தன், கோட்டி, பாலாஜி, ரமேஷ், பவித்ரா, சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
- லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் உள்ள வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் சவுடு மண் ஏற்றி வருவதாக திருவள்ளூர் துணை தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது முன்னிலையில் பெரியபாளையம் போலீசார் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சவுடு மண் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதனால் அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் நடுரோட்டில் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்த போது வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
திருவள்ளூர் தாசில்தார் சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
- அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது.
- ஜாபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூர்:
திருமுல்லைவாயல், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவருக்கு சொந்தமான லாரி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த போது மாயமானது.
இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்தபோது பூந்தமல்லியில் உள்ள லாரிக்கு பாடி பிட்டிங் செய்யும் இடத்தில் மாயமான லாரி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த சத்தியமூர்த்தி, கங்கா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி லாரியை திருடிய ஜாபர் என்பவரும் பிடிபட்டார்.
விசாரணையில் ஜாபர் கூறும்போது, தான் வால்வோ பஸ் வைத்து தொழில் செய்ததாகவும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த பஸ்சை விற்று விட்டு லாரிகளை திருடி அதன் பாகங்களை பிரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தார்.
போலீசில் சிக்காமல் இருக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத 2008-ம் ஆண்டுக்கு முந்தைய பழைய வாகனங்களை திருடியதாக கூறி உள்ளார். அவர்கள் அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜாபர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.






