என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார்.

    புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை வாங்கி கொடுத்து விடியலை கொடுக்க முடியவில்லை. இப்போது இந்தியாவுக்கு விடியல் கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். அதை கேட்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கும் கூட்டணி யாகத்தான் இருக்கிறார்கள். கர்நாடக முதல்- மந்திரியிடம் பேசி காவிரி தண்ணீரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்து விடியல் தர முடியாதவர்களால் இந்தியாவுக்கே எப்படி விடியலை கொடுக்க முடியும்.

    மும்பையில் கூடி ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார். முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்ற பனியனை தான் அணிந்து கொண்டு இருந்தார்கள். இப்போதும் அப்படியே அணிந்து தான் மும்பைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்படி பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்துக்களை பார்க்கும்போது 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவேன் என்றானாம்' என்ற கதையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் நாங்களெல்லாம் சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று கைகோர்த்து இருக்கிறார்கள்.

    • தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது.
    • ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.

    ஆட்சியில் இருக்கும் போது ஒரு திட்டத்தை கொண்டு வருவதும், அதன் பிறகு அதே திட்டத்தை எதிர்ப்பதும் இந்தியாவில் தி.மு.க.வால் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அந்த கட்சியை பார்த்து நாடே சிரிக்கிறது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

    தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதே தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வேறு வழியில்லாமல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.

    மசோதா வரும்போது விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் தங்களுக்கு தெரியும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது பயிற்சி வகுப்புகளையும் ரத்து செய்து விட்டு போராடுகிறார்கள்.

    அதேபோல்தான் கச்சத்தீவையும் எழுதி கொடுத்து விட்டு இலங்கையிடம் இருந்து திருப்பி வாங்குங்கள் என்று போராடுகிறார்கள். இவை எதுவும் நடக்காது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.

    • கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இளங்கோவிற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
    • தலைமறைவாக உள்ள வாலிபரின் தந்தை, பெரியப்பாக்கள், சித்தப்பா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு ரெயில் மூலம் சென்று வரும்போது, திருத்தணி அடுத்த குடிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் இளங்கோ (வயது 30) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துவிட்டு இளங்கோ பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இளங்கோவிற்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இளங்கோ மற்றும் அவரது பெற்றோர்களிடம் இளம்பெண் மற்றும் அவரது தந்தை கேட்டதற்கு ஆடி மாதம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக இளங்கோ குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இளங்கோவிற்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி இளங்கோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள இளங்கோவின் தந்தை நாகரத்தினம், பெரியப்பாக்கள் சக்கரபாணி, கிருஷ்ணமூர்த்தி, சித்தப்பா சஞ்சீவி ஜெயராம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் சுமார் 50 முதல் 60 ஆண்டுகள் வயதுடையவை ஆகும்.
    • உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நட்டு பராமரிக்கின்றனர்.

    பெரியபாளையம்:

    சென்னை வெளிவட்டச்சாலையில், திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக சாலையின் இருமருங்கிலும் நன்கு வளர்ந்திருந்த 500-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின்றனர். இவ்வாறு சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் சுமார் 50 முதல் 60 ஆண்டுகள் வயதுடையவை ஆகும். தமிழக வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் முக்கியமான ஒன்றுதான். சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு இணையாக நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வெளிவட்டச்சலைகள் விரிவாக்கம் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

    இவ்வாறு சாலை விரிவாக்கத்திற்கு ஒரு மரம் வெட்டும்போது 10 மரக்கன்றுகள் நடவேண்டும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நட்டு பராமரிக்கின்றனர். அவ்வாறு நடப்படும் மரங்கள் அதிகபட்சமாக 6 மாதங்களில் முழுமையாக அந்த இடத்துடன் பொருந்தி தழைத்து வளர்கின்றன. இதற்காக ஆகும் செலவும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு ஆகும் செலவை விட குறைவு என்று கூறப்படுகிறது.எனவே, மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை உறுதி செய்ய உட்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் போதே மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு பராமரிப்பதற்கான பணிகளையும் அதன் அங்கமாக சேர்க்க வேண்டும் என பசுமைத்தாயகம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம்,எல்லாபுரம் தெற்கு ஒன்றியம், கொமக்கம்பேடு ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கத்திற்கு மரங்களை வெட்ட வேண்டாம்.மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலம் மற்றும் கோஷம் எழுப்பினர். அப்பொழுது பெண்கள் மரத்தை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும், ஒரு மரத்தை சுற்றி வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக கூறி கதறி அழுதனர்.இப்போராட்டத்திற்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய பாமக செயலாளர் இரா.மணிமாறன் தலைமை தாங்கினார். பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

    இதில், பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ச.க.சங்கர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்திய மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆலோசகர் ஆலப்பாக்கம் து.சேகர், மாவட்ட செயலர் மோகன், மாவட்டத் தலைவர் ஆனந்தன், மோகன், பழனி உட்பட ஏராளமான நிர்வாகிகளும், பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில், பசுமைத்தாயகம் முத்து நன்றி கூறினார்.

    • தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.

    தேர்தல் வாக்குறுதியாக நீட்தேர்வை தடை செய்வோம் என்று உறுதி அளித்தது உண்மைதான். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது நீட் தேர்வு தமிழகத்தில் நடை பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தான் நீட்தேர்வுக்கு கையெழுத்து பெற்று தமிழகத்தில் வந்தது.

    இந்த நீட்தேர்வை தடுக்க சட்டபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் தி.மு.க. போராடிக் கொண்டு இருக்கிறது.

    டிசம்பர் மாதம் நடை பெறும் சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டில் இதே உற்சாகத்துடன் இளைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    நீட்தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மதுரையில் நடந்த அ.தி.மு.க.மாநாடு கொள்கையே இல்லாத மாநாடு. மத்திய அரசு பல்வேறு துறைகளில் முறைகேடு செய்து உள்ளது சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூரில் இருந்து செவ்வாபேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிநெடுக மாலை அணி வித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். விழா மேடைக்கு வந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் சேலம் மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூ.1 கோடியே 50 லட்சமும், கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ரூ.1 கோடியும், மேற்கு மாவட்டம் சார்பில் ரூ.1 கோடியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆவடி மாநகர செயலாளர் சன் பிரகாஷ், திருவேற்காடு நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான என்.இ.கே.மூர்த்தி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை ரவி, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷாராணி ரவி, திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை.எம்.ஜெயகுமார், துணை சேர்மன் பரமேஸ் வரி கந்தன், திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடி வேலு, மாவட்ட பிரதிநிதி பூவை. ஜெ.சுதாகர், செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு, மாவட்ட ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் அன்பு என்கிற ஆல்பர்ட், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கே.வி.லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்ற ழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை மறுநாள்(3-ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடும் மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், வழிபாட்டு குழுவினரும் செய்து வருகிறார்கள்.

    • ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது ரெயில்நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 23 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதனை மர்ம நபர்கள் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரின் கண்காணிப்பால் ரெயில் நிலைய நடைமேடையில் போட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்து உள்ள செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுப் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணம்பாளையத்தில் காலி மைதானம் ஒன்றின் அருகில் உடற் பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 வாலிபர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. உடற்பயிற்சி கூடத்துக்குள் யாரோ வருவதை அறிந்ததும் விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

    அவர்கள் சுதாரிப்பதற்குள் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 3 பேரையும் சரமாரியாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இதில் விஜய், ஸ்ரீகாந்த், அஜய்குமார் ஆகிய 3 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது.

    3 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த படியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இவர்களில் விஜய், ஸ்ரீகாந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜய்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் பாலகிரு்ஷணன் மற்றும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜய், ஸ்ரீகாந்த் இருவரது உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், கொலையுண்ட வாலிபர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கொலையுண்ட ஸ்ரீகாந்த், விஜய் இருவரும் சோழவரத்தை அடுத்துள்ள பெருங்காவூரை சேர்ந்தவர்கள் ஆவர். ஸ்ரீகாந்துக்கு வயது 20. விஜய்க்கு 26 வயது ஆகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது கண்ணம் பாளையத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் கொலையுண்ட ஸ்ரீகாந்துக்கும் இடையே கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டு அது பகையாக வளர்ந்துள்ளது.

    இதன் காரணமாகவே 5 பேர் கும்பல் இரட்டை கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தமிழரசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, கொலையாளிகள் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மணலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் அ.தி.மு.க. பிரமுகர் பார்த்தீபன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே செங்குன்றம் பகுதியில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
    • தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்தார்.

    அவர், தனது இறப்புக்கு பின்னர் பிறர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். எனவே நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அம்சவள்ளி திடீரென இறந்தார். இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மகன்கள் தெரிவித்தனர். இது குறித்து தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டாக்டர்கள் பரிசோதித்தபோது அம்சவள்ளியின் கண்கள் நல்ல நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.

    • தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சூர்யாநகர் ஸ்ரீ மதி கங்காதேவி பஜ்ரங்கதலால் சோக்கானி விவேகானந்தா வித்யாலையா மேல் நிலை பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் மாணவர்களுக்கு பழங்காழ பாரம்பரிய விளையாட்டுகளின் பயன்கள் குறித்தும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.
    • தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    செங்குன்றம்:

    மாதவரம் மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், மதுரவாயல் மற்றும் புழல் பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் புத்தாகரம் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் தாங்கல் ஏரியை சுற்றி பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி ஏற்கனவே பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தற்போது தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஏரிக்கரையோரம் வீடு, கடைகள் மற்றும் குடோன்கள் கட்டி உள்ளனர். இதனை சிலர் வாடகைக்கும் விட்டு பணம் வசூலித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

    இதேபோல் ஏரிக்கு வரும் தண்ணீர் பாதையும் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழை பெய்யும்போது ஏரிக்கு தண்ணீர் வராமல் ஆங்காங்கே தடைபட்டு நின்று பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக ஏரியில் வழக்கமான தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளன. இதனால் ஏரிக்கரையை சுற்றிலும் தற்போது கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளை இடித்தனர். இப்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மட்டும் இடித்து விட்டு செல்வதால் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.

    மேலும் தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. முட்செடிகள் படர்ந்து உள்ளன. இதனையும் அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க ஏரியை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    இந்த ஏரியில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்தால் சூரப்பட்டு, மேட்டூர், பாரதிதாசன் நகர், சண்முகபுரம் மற்றும் மாதனாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×