என் மலர்
திருவள்ளூர்
- ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.
இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.
தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
- மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர். திருவொற்றியூர். பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமை யியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி பங்கேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், மோட்டார் வாகன விபத்து சார்பு நீதிபதி இ.எம்.கே. யஸ்வந்த்ராவ் இங்கர்சால், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் ஸ்டான்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்கள் முகாம்பிகை, செல்வஅரசி மற்றும் பவித்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், டேனியல் அரிதாஸ் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 102 வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தீர்வு காணப்பட்டது. 6453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3172 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 இழப்பீடு தீர்வு காணப்பட்டது.
பொன்னேரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி, முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் முன்னிலை வகித்தனர். இதில் நிலுவையில் இருந்த 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1 கோடியே 83 லட்சத்து 21ஆயிரத்து156 இழப்பீடு வழங்கபட்டன. பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
- ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பொன்னேரி:
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள், கடந்த ஆண்டில் ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டிடம் பழுதடைந்து, மின்விசிறி இயங்காமலும் டியூப்லைட் எரியாமலும் தண்ணீர் வசதி இன்றி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இரு்நததால் சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மீஞ்சூர் பி.டி.ஓ. சந்திரசேகர் குமார் தலைவர் பவானி கங்கை அமரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- பீரோவில் இருந்த கைப்பையில் 4200 ரூபாய் ரொக்கம் பணம் 7500 ரூபாய் மதிப்புள்ள 90 அமெரிக்க டாலர் ஆகியவற்றை எடுத்துள்ளனர்.
- சுற்றி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த டிவி புரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் வச்சலா (57). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு உறங்கிய நிலையில் மர்ம நபர்கள் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த கைப்பையில் 4200 ரூபாய் ரொக்கம் பணம் 7500 ரூபாய் மதிப்புள்ள 90 அமெரிக்க டாலர் ஆகியவற்றை எடுத்துள்ளனர்.
மற்றொரு அறையின் பூட்டைத் திறந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச்சையும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி சாவியை உள்ளே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் .
இந்த நிலையில் வச்சலா சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுற்றி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது.
- கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள மூலவர், விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு கருங்கல் தரைதளம் அமைத்து, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய எஸ்.எஸ்.கியூ லைன் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.1.25 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மண்டல அபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இக்கோவிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இக்கோவிலில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்படி கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு ஆகிறது. இதை முன்னிட்டு இன்று விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் ஆனந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. மதியம் மகாபூர்ணாகுதி நடந்து. பின்னர், நவக்கலச தீர்த்தங்கள், 108 சங்கு தீர்த்தங்கள் மங்கள வாத்திய முழங்க பிரகார புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு புஷ்ப-ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புஷ்ப அலங்காரத்தில் உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
- பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருமழிசையில் பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக வரதராஜபுரம் பெங்களூர் நெடுஞ்சாலையை சேர்ந்த ராஜ இளங்கோ என்பவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமழிசை வி.ஆர்.புரம் பெங்களூர் நெடுஞ்சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடையை திறக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். மதுக்கடை திறக்கப்பட உள்ள இடம் போக்குவரத்து நெரிசலான இடமாகும். அந்த இடத்தில் மதுக்கடையை திறந்தால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக இருக்கும். பெங்களூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை ஆரம்ப நிலையிலேயே நிறுத்தி வைத்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்
- நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கான இடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி இடத்திற்கு தேர்வு செய்யலாம் என அறிவித்து ஏகாட்டூர், திருவூர் பள்ளிக்கு மட்டும் நேற்று இரவு 8 மணியளவில் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.
இதனால் குறைவான இடத்திற்கு ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் ஆர்கே பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் அறிவிப்பு தரவில்லை என்று உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது.
- நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது.
பொன்னேரி:
பொன்னேரி மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மெட்ராஸ் ஐ கண்நோய்க்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த கண்நோயாால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் 2 வாரத்துக்கும் மேல் இதனால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-
மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று ஆகும். கண்ணின் விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது எளிதில் பரவக்கூடியது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்து வாங்கி ஊற்ற வேண்டாம்.
மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் கூசும் பொருட்களை பார்க்க வேண்டாம். நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. வெளியில் வெயிலில் அதிகம் செல்ல வேண்டாம். செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், குளிர்ச்சியான நீர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று வந்தால் கைகளை உடனடியாக கழுவ வேண்டும. இதுபற்றி பயப்படத் தேவையில்லை. இதற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது.
- கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் பரவலாக பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
ஜமீன்கொரட்டூர்-74
செங்குன்றம்-34
கும்மிடிப்பூண்டி-5
பள்ளிப்பட்டு-20
ஆர்.கே.பேட்டை-54
சோழவரம்-28
பொன்னேரி-16
பூந்தமல்லி-23
திருவாலங்காடு-26
திருத்தணி-32
தாமரைப்பாக்கம்-23
திருவள்ளூர்-54
ஊத்துக்கோட்டை-3.
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு3300 மி.கனஅடி. இதில் 1866 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645மி.கனஅடி. இதில் 2688 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 128 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி எரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2337 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
- நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.
திருத்தணி:
திருத்தணி, சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார்.
- சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியபாளையம்:
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டக்கிளை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர், ஊர்வலமாக சென்று பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட முயன்றனர்.
இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 97 பெண்கள்,102 ஆண்கள் என மொத்தம் 199 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
- மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (60). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து புகுந்த மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






