search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் இடம் மாறுதல் கலந்தாய்வு: கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு உடற்கல்வி ஆசிரியர்கள் வாக்குவாதம்
    X

    திருவள்ளூரில் இடம் மாறுதல் கலந்தாய்வு: கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு உடற்கல்வி ஆசிரியர்கள் வாக்குவாதம்

    • உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்
    • நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கான இடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

    மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி இடத்திற்கு தேர்வு செய்யலாம் என அறிவித்து ஏகாட்டூர், திருவூர் பள்ளிக்கு மட்டும் நேற்று இரவு 8 மணியளவில் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.

    இதனால் குறைவான இடத்திற்கு ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் ஆர்கே பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் அறிவிப்பு தரவில்லை என்று உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×