என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொன்னேரி அருகே அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    பொன்னேரி அருகே அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை

    • பீரோவில் இருந்த கைப்பையில் 4200 ரூபாய் ரொக்கம் பணம் 7500 ரூபாய் மதிப்புள்ள 90 அமெரிக்க டாலர் ஆகியவற்றை எடுத்துள்ளனர்.
    • சுற்றி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த டிவி புரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் வச்சலா (57). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு உறங்கிய நிலையில் மர்ம நபர்கள் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் பீரோவில் இருந்த கைப்பையில் 4200 ரூபாய் ரொக்கம் பணம் 7500 ரூபாய் மதிப்புள்ள 90 அமெரிக்க டாலர் ஆகியவற்றை எடுத்துள்ளனர்.

    மற்றொரு அறையின் பூட்டைத் திறந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச்சையும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி சாவியை உள்ளே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் .

    இந்த நிலையில் வச்சலா சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுற்றி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×