என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமழிசையில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு
- அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
- பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திருமழிசையில் பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக வரதராஜபுரம் பெங்களூர் நெடுஞ்சாலையை சேர்ந்த ராஜ இளங்கோ என்பவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திருமழிசை வி.ஆர்.புரம் பெங்களூர் நெடுஞ்சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடையை திறக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். மதுக்கடை திறக்கப்பட உள்ள இடம் போக்குவரத்து நெரிசலான இடமாகும். அந்த இடத்தில் மதுக்கடையை திறந்தால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக இருக்கும். பெங்களூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை ஆரம்ப நிலையிலேயே நிறுத்தி வைத்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






