என் மலர்
திருவள்ளூர்
- வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது.
- வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர்.
மீஞ்சூரை அடுத்த வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் மீஞ்சூர் போலீசுக்கும், கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர். தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
- 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
- திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகவல்லி. இவர்களது 3 வயது மகள் நிரஞ்சனா.
இந்நிலையில் திருத்தணியை அடுத்த புஜ்ஜி ரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ரமேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு சிறுமி நிரஞ்சனா விளையாடிக்கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து சிறுமி நிரஞ்சனாவை பெற்றோர் தேடியபோது அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த உறவினர்கள் சோகமானார்கள்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆண் நண்பருடன் மனைவி பேசியதை கண்டித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது
- மணிகண்டனின் தாய் பிரியா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி,பேட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). இவர் இதே பகுதியைச் சேர்ந்த கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சபி (வயது20) என்ற பெண்ணை காதலித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சபி இப்பகுதியில் உள்ள அரச மரம் அருகே நின்று கொண்டு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த மணிகண்டன் தனது மனைவி சபியின் இச்செயலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சபி தனது உறவினர்களுக்கு போன் செய்து மணிகண்டன் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் இதை உடனடியாக வந்து கண்டிக்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சபியின் உறவினர்கள், மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்களாம். இதனால் அவமானம் அடைந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் தாய் பிரியா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பிரச்சினை இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன.
- முகாமில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன், முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நில ஆர்ஜித வழக்குகள் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 100 வழக்குகளில் 30 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 1 கோடியே 55 லட்தத்து 61 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன. முகாமில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.
- கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதுரைவீரன், ஸ்ரீமுனீஸ்வரர் ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் இருந்து கங்கை நீர், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு தேர் பவனி சக்தி கிரகம் ஊர்வலம் நடைபெற்றது. சனிக்கிழமை மதியம் கோவில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு அக்கினிக்கப்பரை ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று காலை ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தூப-தீப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை வேப்பம்பேடு கிராமம் ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று புனித நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி கொட்டும் மழையில் நடைபெற்றது.
பின்னர், கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.மாலையில் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நாகாத்தம்மன் கே.முரளி தலைமையில் பக்தர்கள், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது.
- சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன.
குறிப்பாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பெரிய பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற முதியவர் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்றார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.
அவரே பள்ளத்தில் கற்களை கொட்டினார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டினார்.
திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களை பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
- சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
திருநின்றவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-
ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.
பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர்.
- என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு தண்டவாளம் மற்றும் மின்வயர்களை சரிபார்த்து ஆய்வு செய்ய என்ஜின் வந்தது. லூப் தண்டவாளத்தில் இருந்து முதல் நடைமேடைக்கு சென்ற போது திடீரென ரெயில் என்ஜீனின் 2 சக்கரங்கள் தடம் புரண்டது. இதையடுத்து ஆய்வு செய்ய வந்த என்ஜீன் அந்த தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதுபற்றி உடனடியாக பொன்னேரி ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில்வேபணிமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். பின்னர் அந்த என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.
இதனால் இன்று காலை சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் ரெயில்சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏற்கனவே நேற்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
- மேலானூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
- தகவலறிந்து அங்கு வந்த வெங்கல் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு கீழானூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காக்களூரில் ஏற்பட்ட மின்தடையால் மேலானூர் மின் பாதையை துண்டித்துவிட்டு காக்களூர் பகுதிக்கு மின் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலானூர் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பூண்டி துணை மின் நிலையத்தில் இருந்து உங்கள் ஊராட்சிக்கு மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்களாம். ஆனால்,இந்த ஊராட்சிக்கு 4 நாட்களாக மின் சப்ளை செய்யப்படவில்லை.
இதுகுறித்து மின்வாரிய பொறியாளர், துணை கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்டவர்களை கிராம மக்கள் தொடர்பு கொண்டும் எந்த வகையான பயனும் கிடைக்கவில்லையாம். காக்களூர் பகுதிக்கு மின் சப்ளை செய்வதுதான் எங்களுக்கு தற்போதைய முக்கிய பணியாக உள்ளது என அலட்சியமாக பதில் அளித்தார்களாம். இதனால் இந்த ஊராட்சியில் மின்தடை ஏற்பட்டதால் குடிநீர் சப்ளை செய்யும் பணி தடைப்பட்டது. இதனால் கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிதண்ணீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டது.
மின்தடையால் முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் மின்விசிறி வசதி தடைபட்டதால் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறினார். இதனால் போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர்.
மின் சப்ளை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும், பழைய வழித்தடத்திலேயே மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
- ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு கீழானூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காக்களூரில் ஏற்பட்ட மின்தடையால் மேலானூர் பகுதிக்கு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு காக்களூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிவிடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் மேலானூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இரவு நேர மின்தடையால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
இதனால் கிராம மக்களின் மறியல் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. இதையடுத்து வெங்கல் போலீசார் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார். இதனால் போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர். மின் சப்ளை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் பழைய வழிதடத்திலேயே மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கிராமமக்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணவகுத்து நின்றன.
இதற்கிடையே இன்று காலை 10 மணிவரை அப்பகுதியில் மின் சப்ளை செய்யப்படவில்லை என்று கிராமமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
- பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள், பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்ட ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வருகின்றன. அவை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி- மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, கனரக வாகனங்கள் மீஞ்சூர்- வண்ட லூர் சாலையை பயன்ப டுத்தவும் பொன்னேரிக்குள் நுழையவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை விடுமுறையினால் இந்த விதிமுறை சரியாக பின்பற்றபடாமல் இருந்து வந்ததது.
இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மீஞ்சூரில் வாகன விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்க உள்ளதால் விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. துரை சங்கர் சேகர், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், டி. எஸ். பி. கிரியா சக்தி, அகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு எந்த கனரக வாகனமும் வரக்கூடாது எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையின் ஓரங்களில் விளம்பர பேனர் வைக்ககூடாது, சாலையின் ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இதில் தாசில்தார் செல்வகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.






