என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை.
    • 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த குரு (வயது 23), பிரித்திவி ராஜ் (20), கும்பகோணத்தை சேர்ந்த சரண்ராஜ் (21), தர்மராஜ் (30), சந்தோஷ் (26) ஆகிய 5 பேர் மீதும் மணஞ்சேரியில் வெடிக்குண்டு வீசிய வழக்கு உள்ளன.

    இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி குரு, பிரித்திவிராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் குணடர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
    • திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வட்டார குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை மருத்துவர் மகேந்திரன், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டங்கள் குறித்தும், கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    மேலும், உள்மாநிலம், வெளிமாநிலம், உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போன்ற இனங்களை கொண்டு விவசாயக்குழு உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • 50 சதவீத மானியத்தில் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களது உளுந்து பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இந்த ஆண்டு அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயறு வகை விதைப்பு செய்து வருகின்றனர்.

    இந்தமாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பெய்த பருவம் தவறிய மழையால் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து பயறு பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் மீண்டும் உளுந்து பயறு சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வந்த பயறு வகை சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்துவிட்டது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    எந்திரம் மூலம் அறுவடை நடைபெறுவதால் உளுந்து பயருக்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் இல்லாமல் உள்ளது.

    மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் பயறு சேதபடுத்தப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் உளுந்து பயறு தெளிப்பதை நிறுத்திவிட்டனர்.

    எனவே கால்நடைகளை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்கு அரசு, கால்நடை பட்டிகள் திறக்க வேண்டும்.

    அப்போதுதான் உளுந்து பயறு சாகுபடி நஞ்சை தரிசில் அதிக அளவு நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் விளக்குடி கிராமத்தில் நடந்த முனைப்பு இயக்க கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் பேசும்போது, விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களது உளுந்து பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், ஊராட்சி துணை தலைவர் வடிவேல் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு.
    • பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், வக்ராநல்லூர் ஊராட்சியில் ரூ.33.04 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டு உள்ளதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரையில் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டு உள்ளதை யும், வக்ராநல்லூர் பகுதியி லுள்ள அங்கான்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்ட சத்து உணவு குறித்தும், ரூ.1.565 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும், நூலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் புத்தகத்தினையும், நூலக வருகைப்பதிவேடு குறித்தும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவி ட்டார்.

    இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், ரங்கராஜன், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகளின் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஜூனியர் ரெட்கிராஸ்) இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலை மையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் முன்னிலையில், மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இடையூர் சங்கேந்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்.
    • 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் திருவாரூர் வ.சோ.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா மற்றும் திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.

    இதில் 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் ஒருங்கிணைப்பாளர்களாக மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ச.ஜயராமன், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் என்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரிய ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் அரக்கோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விழிப்புணர்வு.
    • கடைவீதி, பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட தொழுநோய் அலுவலர் அறிவுறுத்தலின் படியும் இடையூர் சங்கேந்தி வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன மேற்பார்வையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது.

    இடையூர் சங்கேந்தி மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் வருவதை தடுப்பது குறித்தும் விரிவாக விழிப்புணர்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் .மேலும் கடைவீதி, பேருந்து நிலையம் போன்றவற்றில் விழிப்புணர்வு துண்டுபிர சுரங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, செல்வசிதம்பரம், அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.
    • வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் 24 வயதான நரேஷ் குமார்.

    இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா வயது 21 என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.

    இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுஷ்மிதா நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவா ரூருக்கு சென்றுள்ளனர்.

    அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொ லையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • மழையால் சம்பா தாளடி நெல் பயிர்கள் உளுந்து, பயிர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
    • கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துபேட்டை, ஆகிய பகுதிகளி்ல் சம்பா தாளடி நெல் பயிர்கள் உளுந்து, பயிர்கள் மற்றும் ஊடு பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் மலைக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு மழையின் காரணமாக நனைந்து சேதமடைந்துள்ளது. ஆகையால் கொள்முதல் நிலையங்களில் 22சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பயிர்காப்பீட்டு மகசூல் சோதனையை மீ்ண்டும் கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோட்டூர் ஒன்றியத்தின் சார்பில் கடைவீதியில் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து தலைமையில் கோட்டூர் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.சௌந்தரராஜன். மாவட்ட துணை செயலாளர் பாலை.பரந்தாமன். வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் எம்.சிவசண்முகம்.

    மற்றும் கட்சியின் முன்னணி தோழர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர்.

    • தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.
    • திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட முத்துப்பேட்டையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இறால் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை இணைந்து இறால் வளர்ப்பின் வளரச்சி தொழில்நுட்பங்கள் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்த இறால் விவசாயி கள் கருத்தரங்கு கூட்டத்தில், இறால் வளர்பாளர்களிடையே சமீபத்திய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தையில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கமாகும்.

    தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அவர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையின் மூலம் நான்கு மீன் சில்லரை வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி பொருத்திய இருசக்கர வாகனத்தினை வழங்கினார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கீர்த்தனா மணி, கோட்ட பொறியாளர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நாகப்பட்டினம் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் உதவி இயக்குநர் வனச்சரகர் முத்துப்பேட்டை மற்றும் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும்.
    • உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுக்களின் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுபயிர்க்காப்பீட்டுடன் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும். உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

    விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்ஜோசப் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்சந்திரராமன், ஒன்றிய செயலாளர்ஜவகர் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ஜெயபால், ஒன்றிய தலைவர்பாலு, நகர செயலாளர் டி.பி.சுந்தர், நகர தலைவர் பி.எம்.பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×