என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Relief"

    • மழையால் சம்பா தாளடி நெல் பயிர்கள் உளுந்து, பயிர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
    • கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துபேட்டை, ஆகிய பகுதிகளி்ல் சம்பா தாளடி நெல் பயிர்கள் உளுந்து, பயிர்கள் மற்றும் ஊடு பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் மலைக்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு மழையின் காரணமாக நனைந்து சேதமடைந்துள்ளது. ஆகையால் கொள்முதல் நிலையங்களில் 22சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பயிர்காப்பீட்டு மகசூல் சோதனையை மீ்ண்டும் கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோட்டூர் ஒன்றியத்தின் சார்பில் கடைவீதியில் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து தலைமையில் கோட்டூர் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.சௌந்தரராஜன். மாவட்ட துணை செயலாளர் பாலை.பரந்தாமன். வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் எம்.சிவசண்முகம்.

    மற்றும் கட்சியின் முன்னணி தோழர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர்.

    ×