என் மலர்
திருவாரூர்
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
- மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மற்றும் மன்னார்குடி ரெட் கிராஸ் சொசைட்டி வட்டக் கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மன்னார்குடியில் நடத்தியது.
மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
வட்டாரப் போக்கு–வரத்து அலுவலக கண்காணிப்–பாளர் ராஜ்குமார், மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஓருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்டோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்ட கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜே. ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் ரமேஷ், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சுகுணா, செங்கமலத் தயார் மகளிர் கல்லூரி கவியரசி, பவித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
- மருந்து மாத்திரைகள், டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி:
சென்னை அப்போலோ பவுண்டேஷன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், கட்டிமேடு ஊராட்சி மன்றம் மற்றும் திருத்துறைப்பூண்டி புரோபஷனல் கொரியர் இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் லெனின், டாக்டர் லாவண்யா, நம்பிக்கை தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில் உடல் எடை, உயரம், மூட்டு வலி, சக்கரை வியாதி,பெண்களுக்கு உண்டான வியாதிகள் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் ,டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சுமார் 255 நோயாளிகள் பயன் பெற்று மருந்து மாத்திரைகள் வாங்கிச் சென்றனர். இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், சென்னை அப்போலோ பவுண்டேஷன் பில்லியன் காட்ஸ் மூத்த செயல் அலுவலர் ஆனந்த் பாபு, இளநிலை செயல் அலுவலர் சரவணகுமார், புரோபஷனல் கொரியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் சுதா, சக்தி பிரியா, சரண்யா, பிரியா சரவணன், சந்தோஷ் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள்
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அமுதரசு தலைமையேற்று நுகர்வோர் யார், நுகர்வோரின் பொறுப்பு, கடமை பற்றி கூறி விழிப்புடன் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர் மகேஷ் நுகர்வோர் அமைப்பு முதன் முதல் தோன்றியது, நுகர்வோர் அமைப்புச் சட்டம், நுகர்வோரின் பாதுகாப்பு, பொருள்களின் விலை, காலாவதி நாள் பற்றி கூறி கவனமுடனும், கலப்படமற்ற பொருள்களை வாங்கும்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மன்ற பொறுப்பாசிரியர் இராஜாராம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பற்றி கூறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - நுகர்வோருக்கு பில்லே ஆயுதம் என கூறி எந்த பொருள் வாங்கினாலும் ரசீது வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
மேலும், விளம்பரங்கள் வியாபார யுக்தி, தள்ளுபடியும் இலவசங்களும் நம்மை கவரும் சக்தி. எனவே தேவையை தேடி வாங்குங்கள் . தேடி வரும் பொருளை வாங்கி குப்பை ஆக்காதீர்கள் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 9, 11 ஆம் வகுப்பு குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் சக்திபாலா நன்றி கூறினார்.
- தீ விபத்து, பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது.
- பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டரின் ஆலோசனைபடியும் மாவட்ட பேரிடர் வட்டாட்சியரின் வழிகாட்டுதல்படியும், தமிழ்நாடு அரசின் பேரிடர் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டியினை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, தீ விபத்து, இடி மின்னல், வெள்ளம், புயல், காலங்களில் மக்களையும், பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த பயனளிக்கும். மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது. நகராட்சி நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார். நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், மேலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தனர். நகராட்சியில் மக்கள் அறியும் வண்ணம் சுவர்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.
- விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தகவல் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில் மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்–பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்க–கத்தால் ஆகஸ்ட்-2022-ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வழங்கலாம்.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளி த்தனர்.
அதனை அவர் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவல ர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபா டுடைய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம், பத்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
- கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.
இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.
- 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கல்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுயஉதவி கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலுடன் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவரும், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவருமான சேரன்குளம் தி.மனோகரன் வழங்கினார்.
- பஸ்சில் பயணித்த 15 மாணவிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு பலபகுதிகளில் இருந்து மாணவிகள் பஸ்சில்வந்து படித்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கல்லூரி பஸ் மன்னார்குடி அருகே காளவாய்கரை பகுதியில் வந்த போது செருமங்கலம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி, முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணித்த 15 மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து வந்த மன்னார்குடி போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சகோதரர்களான இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர்.
- இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்கள் ராஜா (வயது 28), முருகானந்தம் (23). சகோதரர்களான இருவரும் சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நாச்சிக்குளம் கிழக்கு கடற்கரை சாலை தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
- மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.
திருத்துறைப்பூண்டி:
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் ஜெ. தாஹிர் தமிழக அரசு வருவாய்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.
எனவே, ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
- தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
திருவாரூர்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை வருகை தருகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா நாளை மறுநாள் (22-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். அங்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வருகிறார்.
முன்னதாக மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்டு இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டில் தங்குகிறார்.
மறுநாள் 22-ந்தேதி திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்கு சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். முன்னதாக தஞ்சாவூரில் மரணம் அடைந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் உபயதுல்லாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






