search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "File"

    • கோப்பினை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
    • களப்பணி ஆற்றிட, கள அலுவலர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு குமரேசன் தலைமை தாங்கினார். முருகானந்தம், சுப்பிரமணியன், அஜெய், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை செயலாளர் மதியழகன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த கோதண்டபாணி கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான கோப்பினை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தேவையற்ற அவசர, கால அவகாசம் வழங்காமல் அறிக்கைகள் கோருவதை தவிர்க்க வேண்டும்.

    அடிக்கடி ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து களப்பணி ஆற்றிட, கள அலுவலர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

    இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், டிரைவர் ஆகிய காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

    • கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
    • மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் ஜெ. தாஹிர் தமிழக அரசு வருவாய்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.

    இந்த கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.

    எனவே, ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×