என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகே பொது மருத்துவ முகாம்
- இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
- மருந்து மாத்திரைகள், டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி:
சென்னை அப்போலோ பவுண்டேஷன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், கட்டிமேடு ஊராட்சி மன்றம் மற்றும் திருத்துறைப்பூண்டி புரோபஷனல் கொரியர் இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் லெனின், டாக்டர் லாவண்யா, நம்பிக்கை தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில் உடல் எடை, உயரம், மூட்டு வலி, சக்கரை வியாதி,பெண்களுக்கு உண்டான வியாதிகள் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் ,டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சுமார் 255 நோயாளிகள் பயன் பெற்று மருந்து மாத்திரைகள் வாங்கிச் சென்றனர். இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், சென்னை அப்போலோ பவுண்டேஷன் பில்லியன் காட்ஸ் மூத்த செயல் அலுவலர் ஆனந்த் பாபு, இளநிலை செயல் அலுவலர் சரவணகுமார், புரோபஷனல் கொரியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் சுதா, சக்தி பிரியா, சரண்யா, பிரியா சரவணன், சந்தோஷ் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.