search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் பேரிடர் விழிப்புணர்வு போஸ்டர் வெளியீடு
    X

    விழிப்புணர்வு போஸ்டரை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    திருத்துறைப்பூண்டியில் பேரிடர் விழிப்புணர்வு போஸ்டர் வெளியீடு

    • தீ விபத்து, பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது.
    • பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டரின் ஆலோசனைபடியும் மாவட்ட பேரிடர் வட்டாட்சியரின் வழிகாட்டுதல்படியும், தமிழ்நாடு அரசின் பேரிடர் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டியினை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறும்போது, தீ விபத்து, இடி மின்னல், வெள்ளம், புயல், காலங்களில் மக்களையும், பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த பயனளிக்கும். மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

    பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது. நகராட்சி நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார். நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், மேலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தனர். நகராட்சியில் மக்கள் அறியும் வண்ணம் சுவர்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.

    Next Story
    ×