என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவாரூர்:

    குடவாசல் அருகே சீதக்கமங்கலத்தில் வீரபத்திர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழாவுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 18-ந் தேதி நடந்தது. அதையடுத்து தினசரி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருமலைராஜன் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கிருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது.

    1432 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயின் தலைமையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி வரும் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் நாளை ஆவூர் உள்வட்டத்தைச் சேர்ந்த அன்னுக்குடி, சாலபோகம், உத்தமதானபுரம், மூலாழ்வா ஞ்சேரி, அவிச்சாகுடி, நல்லூர், ரங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வாணிய க்கரம்பை, சிங்காரம்பாளையம், வீராணம், நல்லம்பூர் ஆவூர் ஊத்துக்காடு, வேலூர் ஏரி, மணலூர், மதகரம்,மாளிகை திடல், வேலங்குடி, வீரமங்கலம், களத்தூர், மணக்கால், சடையங்கால், முனியூர், கிளியூர், அவளிவநல்லூர், 47 ரங்கநாதபுரம், உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

    25 ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரபுரம் வலங்கை மான் மேல விடையல், கீழ விடையல், கண்டியூர், சித்த ன்வவாழூர், செம்மங்குடி, தொழுவூர், விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், 18 ரெகுநாதபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், புளியகுடி, பாடகச்சேரி, மாத்தூர், மருவத்தூர், கிராமம் உட்பட 17 வருவாய் கிராம ங்களுக்கு நடைபெறுகிறது.26 ஆம் தேதி ஆலங்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த திருவோணமங்கலம், அமராவதி சாரநத்தம், ராஜேந்திரன் நல்லூர், ஆலங்குடி, பூந்தோட்டம், பெருங்குடி, அரித்துவார மங்கலம், கேத்தனூர், நெம்மேலிகுடி, படுகை நெம்மேலிகுடி, எருமை படுகை, நார்த்தங்குடி, புலவர் நத்தம், பூனாயிருப்பு, ரகுநாதபுரம், மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி, அரவத்தூர், அரவூர், பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    மேற்கண்ட ஜமாபந்தியில் பொதுமக்கள் பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் கோருதல் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டன.
    • உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை தாலுகா, ஜாம்புவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    தலைமையாசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களை கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காண்பிக்கப்பட்டன.

    பயிற்சியின் முதன்மை கருத்தாளர்களாக வானவில் மன்ற லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக உற்சவ திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு கோவிலூர் கோவிலில் இருந்து சுவாமி எடுத்து வரும் நிகழ்ச்சியும், விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    இந்நிலையில், நேற்று அம்மனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை வெள்ளக்குளம் கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,

    வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னார், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், மாவிளக்கு போடுதல், முடி இறக்குதல் ஆகியவை நடந்தது.

    இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    • மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவாரூர்:

    திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரையில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.

    இதில், அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக, பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பயிற்சி முடிந்து டாக்டர்களாக பணியாற்றும் போது நோயாளியுடன் கனிவாக பழகி வேண்டும்.
    • அவர்களின் நோய்களை தீர்ப்பதில் துணை நிற்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் (பொறுப்பு) அஸ்வினி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜீவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் பேசுகையில், 'பயிற்சி முடிந்து டாக்டர்களாக பணியாற்றும் போது நோயாளியுடன் கனிவாக பழகி அவர்களின் நோய்களை தீர்ப்பதில் துணை நிற்க வேண்டும். மேலும் அர்ப்பணிப்பு எண்ணத்துடன் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்' என்றார்.

    முகாமில் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நடராஜ் முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் அப்துல் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாக உள்ளது.
    • உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் மூலவராக புற்றிடம் கொண்டார் அருள்பாலித்து வருகிறார். உற்சவராக தியாகராஜர் அருள்பாலித்து வருகிறார். கமலாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். அதேபோல கோவிலுக்கு அருகே உள்ள கமலாலய குளம் புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. கமலாலயக்குளம் மகாலட்சுமி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது.

    தியாகராஜர் கோவிலில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடந்தது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து கமலாலயம் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    • வருகிற 23-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட த்திலு ள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளு க்குட்பட்டு பரிசீலிக்க ப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டு வர வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
    • வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.

    மன்னார்குடி:

    முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல்துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

    காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.

    விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.

    இது ஒரு தவறான முன்னுதாரணம்.

    ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

    அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    நான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.

    எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.

    பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வருகிற 30-ந் தேதி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்.
    • போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையான நிதியை குறைத்து வழங்கியுள்ள மத்திய அரசை கண்டித்து வருகிற மே 30-ந் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த பாண்டி, வேப்பஞ்சேரி ஊராட்சி மற்றும் மங்கலூர் கிளைகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்பு செல்வம், சுப்ரமணியன், மங்கல் சம்பத், காசிநாதன் ஆகியோர் சந்தித்து போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    அப்போது, பாண்டி ஊராட்சியில் 20-க்கும் மேற்ப்டட தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கு நிதி அளித்து பாராட்டினர்.

    • சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்ததாவது,

    திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்,

    நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள், அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×