என் மலர்
திருவாரூர்
- கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
- தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.
திருவாரூர்:
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.
ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.
ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.
மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.
இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.
இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
- வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்தி றனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, நடமாடும் மதி அங்காடியை (எக்ஸ்பிரஸ்) இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஆர்வமும், முன்அனு பவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் தொடர்புடைய சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றி தழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று வருகிற 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பாடகச்சேரியை அடுத்த சொரக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு காவலர் அறிவழகன், சிறப்பு தனிப்படை காவலர்கள் புகழேந்தி, முஜ்பூர் ரஹ்மான், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மது பாட்டில்க ளை பறிமுதல் செய்தனர்.
- கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
- இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக்அலி(வயது 42) பெயிண்டர். இவருக்கும் கோசாகு ளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பாஸ்கரை தேடி வந்த பெயிண்டர் சேக்அலிக்கும் பாஸ்கர் மகன் ஸ்ரீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீபன் மற்றும் அவரது தயார் செல்வி ஆகியோர் சேக் அலியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த சேக்அலி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபனை கைது செய்தனர்.
அவரது தயார் செல்வியை தேடி வருகின்றனர்.
- கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பள்ளி திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக வீடு கட்டும் பணி, மேலபாலையூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி, 42.அன்னவாசல் ஊராட்சியில் ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி, எரவாஞ்சேரி மணவா ளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பள்ளி திறப்பதற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- வேலையுடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ல் வேலை வாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டிங் டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் இன்டகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்று தரப்படுகிறது.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
12-ம் வகுப்பை 2022-ம் ஆண்டில் முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்ணும், 2023-ம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இந்த படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இந்த திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
- முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் முத்து ப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமை யில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.
இதில் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
அந்த வகையில் நேற்றுடன் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் 291 பேருக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவா ஸ்கான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், தாசில்தார் மகேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.
- உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகா யேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.
உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
- 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 94 மனுக்கள் பெறப்பட்டது.
- மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தளர்.
மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.
சுமார் 94 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் தாசில்தார் அன்பழகன், மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
- திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர்:
கரூர் மாவட்டம் பாப்பாபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர், திருவாரூரில் தங்கி இருந்து கோவில் கட்டுமான பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சக்திவேல் மீது மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






