பெயிண்டரை தாக்கியவர் கைது

கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பெயிண்டரை தாக்கியவர் கைது
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக்அலி(வயது 42) பெயிண்டர். இவருக்கும் கோசாகு ளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பாஸ்கரை தேடி வந்த பெயிண்டர் சேக்அலிக்கும் பாஸ்கர் மகன் ஸ்ரீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீபன் மற்றும் அவரது தயார் செல்வி ஆகியோர் சேக் அலியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த சேக்அலி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபனை கைது செய்தனர்.

அவரது தயார் செல்வியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com