என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
- உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






