என் மலர்
திருநெல்வேலி
- அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ரெயில்வேகேட்
அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது.
- விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் பால்ராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரியவசந்தி (வயது52). இவர்கள் 2 பேரும் நேற்றிரவு பண்டாரகுளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணகுடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது முத்துச்சாமி புரம் அருகே நான்கு வழிச்சாலை பாலத்தில் அவர்கள் சென்ற போது அவர்களது பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மரியவசந்தி தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பால்ராஜிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 மாத கைக்குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. அந்த குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியிலும், பால்ராஜ் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- நெல்லை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
- இங்கு நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், 2 ஆயிரம் பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை ஐகிரவுண்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், 2 ஆயிரம் பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அறை கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த அறை திறக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது.
அதனைத் திறந்து நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
அதற்கு சற்று தொலைவில் உள்ள மற்றொரு அறையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மருந்து க்கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த அறையை நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி அப்போதைய டீன் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் மருத்துவ மனை வளாகத்தில் உள்ள மரத்து நிழலில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இதனால் செல்போன் திருட்டு, உடைமைகள் மற்றும் பணம் திருட்டு போன்றவை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற டீன் ரேவதியிடம் அந்த அறைகளை திறக்க வழிவகை செய்யுமாறு நோயாளிகளின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நோயாளிகள் உறவினர்கள் தங்கும் அறையில் செயல்பட்டு வரும் மருந்து கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்ற டீன் உத்தரவிட்டுள்ளார்.
டீன் ரேவதி
இது தொடர்பாக டீன் ரேவதி கூறுகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி வளாகத்தில் 2 கட்டிடங்கள் அவர்கள் தங்கு வதற்காக கட்டப்பட்டுள்ளது. தற்போது மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.
இந்த 3 கட்டிடங்களிலும் இனி நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் அறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தங்கும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மருந்துக்கிடங்காக செயல்படும் அறையில் இருந்து மருத்துவ பொருட்கள் வெளி யேற்றப்பட்டு வளாகத்திலேயே மற்றொரு கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது. இது தவிர மக்கள் உட்காரும் வகையில் வேறு ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வளாகத்திலேயே 3 இடங்களில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
- இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
கோரிக்கை மனு
இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.
நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.
2-ம் நாள்
2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
- உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவில் உவரி அருகே உள்ள ஆனைகுடி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் தாமோதரன் (வயது 32) என்பது தெரியவந்தது.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் ஓட்டிவந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 கேன்களில் 275 லிட்டர் மண்எண்ணையை பதுக்கி வைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து காருடன் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தாமோதரனையும் கைது செய்தனர்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது.
- விநாயகப் பெருமானுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் பிராயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது. மாலையில் சாஸ்தா கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சந்திர ஹோரையில் யந்திர ஸ்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பூஜை நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜையுடன், கும்பபூஜை, பிம்பசுத்தி, வேதிகை பூஜை, பூர்ணாகுதியாக சாலை நிறை தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி விமானம் மஹா கும்பாபி ஷேகம் நூதன ஆலயம், நூதன விமானம், நூதன விக்ரகம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமா னுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும், பரிவார தெய்வங்க ளுக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
- இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார்.
நெல்லை:
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
திட்டப்பணிகள் ஆய்வு
இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து 9 மணிக்கு மாநகராட்சியில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடக்கும் விழாவில் மாவட்டத்தில் ரூ.605 கோடியில் 6 யூனியன்களை சேர்ந்த 831 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து குமரிக்கு செல்கிறார். கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பீல் கூடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாலை 4 மணிக்கு மீண்டும் நெல்லை வரும் அமைச்சர் கே.என்.நேரு பாளை நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் எஸ்.என்.ஹைரோட்டில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
தென்காசி
அங்கிருந்து தென்காசி மாவட்டம் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 49 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் செல்கிறார்.
- பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்.
- இவர் சொந்தமாக பசுமாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.
நெல்லை:
நெல்லை பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). இவர் சொந்தமாக பசுமாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே தொழுவம் அமைத்து அதில் பசுமாடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை காணவில்லை. உடனே செந்தில் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தேடிப்பார்த்துள்ளார்.
ஆனால் எங்கு தேடியும் பசுமாட்டை காணவில்லை. தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாட்டை காணாததால், ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் யாரேனும் திருடிச்சென்றிருப்பார்கள் என்று அவர் சந்தேகம் அடைந்தார்.
இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் திருடிச்சென்ற மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார்.
- கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை. வாழ்த்தினர்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை ஒன்றியம் பாளை வடக்கு வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் நொச்சி குளம் பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடா சலபதி பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு தனது பிறந்த நாளை கேக்வெட்டி அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுட னும், ஊர் பொது மக்களுடனும் கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் குளோரிந்தாள், பாளை மேற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், சீனிவாசன், ஆனந்தி சந்திரசேகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், நொச்சிகுளம் கிருஷ்ணாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துக்கென்னடி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை வாழ்த்தினர்.
- களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவர் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
- அதே ஊரைச் சேர்ந்த முருகன் (49) என்பவர், தான் புதியதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டுள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவர் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (49) என்பவர், தான் புதியதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு முருகன், மேல் அதிகாரிகளிடம் கேட்டு ரசீது வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் முருகன், படலையார்குளத்தில் உள்ள முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த முருகன், ஊய்க்காட்டான் ஆகியோர் முருகனை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 2 பேரையும் தேடி வருகிறார்.
- கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வெங்காயம் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
- வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது.
நெல்லை:
வீட்டு சமையல் மட்டுமின்றி ஓட்டல்கள், சுபநிகழ்ச்சிகள் பரிமாறப்படும் சமையலில் அத்தியாவசிய இடத்தை பிடிப்பது வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் பங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
உற்பத்தி குறைவு
இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெங்காயம் குளிர்கால பயிராகும். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதன் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்தது.
ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூலமும் சிறிய வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்.
விலை வீழ்ச்சி
வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி ரூ. 15 முதல் ரூ. 18 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 12 முதல் ரூ. 17 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
- பாலையா தனது பேரன் கார்த்திக் உடன் முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 75).
விபத்தில் சிக்கிய தாத்தா-பேரன்
இவர், நேற்று தனது பேரன் கார்த்திக் (8) உடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரியில் இருந்து முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருவரும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக தற்செயலாக வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தனது காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டதோடு, அவர்களை தனது காரிலேயே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன. தற்போது இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.
சாலை விபத்தில் காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டு, தனது காரிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.






