search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில் ரூ.608 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டுகிறார்
    X

    அமைச்சர் கே.என்.நேரு 

    ராதாபுரத்தில் ரூ.608 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டுகிறார்

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.
    • இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (வெள்ளிக்கிழமை) சுற்றுப்ப யணம் மேற்கொள்கிறார்.

    திட்டப்பணிகள் ஆய்வு

    இதற்காக நாளை காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வருகிறார். காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.

    தொடர்ந்து 9 மணிக்கு மாநகராட்சியில் முடிவுற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

    தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடக்கும் விழாவில் மாவட்டத்தில் ரூ.605 கோடியில் 6 யூனியன்களை சேர்ந்த 831 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து குமரிக்கு செல்கிறார். கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பீல் கூடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மாலை 4 மணிக்கு மீண்டும் நெல்லை வரும் அமைச்சர் கே.என்.நேரு பாளை நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் எஸ்.என்.ஹைரோட்டில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மையத்தில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    தென்காசி

    அங்கிருந்து தென்காசி மாவட்டம் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் 49 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் செல்கிறார்.

    Next Story
    ×