என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் 2 பசுமாடுகள் திருட்டு
    X

    நெல்லையில் 2 பசுமாடுகள் திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்.
    • இவர் சொந்தமாக பசுமாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). இவர் சொந்தமாக பசுமாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே தொழுவம் அமைத்து அதில் பசுமாடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை காணவில்லை. உடனே செந்தில் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தேடிப்பார்த்துள்ளார்.

    ஆனால் எங்கு தேடியும் பசுமாட்டை காணவில்லை. தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மாட்டை காணாததால், ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் யாரேனும் திருடிச்சென்றிருப்பார்கள் என்று அவர் சந்தேகம் அடைந்தார்.

    இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுமாடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் திருடிச்சென்ற மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    Next Story
    ×