என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடி அருகே ரெயில்வே கேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

- அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.
பணகுடி:
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ரெயில்வேகேட்
அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.