என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங் களுக்கும், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்களில் செல்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய பஸ் நிலையத்தில் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், திருப்பதி, பாண்டிச்சேரி, ஈரோடு, வேளா ங்கண்ணி, ஊட்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கான பஸ்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை. டிக்கெட் எடுப்பத ற்காக நீண்ட வரிசையில் காத்தி ருக்க வேண்டி உள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலகட்டங்களில் இங்கே முன்பதிவு செய்வதற்காக பயணிகள் மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே புதிய பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக மேலும் ஒரு கவுண்டரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் காசிபாண்டி(வயது 41). விவசாயி.
- இவர் கடந்த மாதம் 18-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நெல்லை:
மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் காசிபாண்டி(வயது 41). விவசாயி. இவர் கடந்த மாதம் 18-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமையன் பட்டியை அடுத்த வேப்பங்குளம் விலக்கு பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் காசிபாண்டி மற்றும் அவரது நண்பர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காசிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை:
மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பி னர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்ப ட்டது. கூடுதலாக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆதித்தன், சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்ணேஷ் மற்றும் பகுதி, வட்ட செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.
- தாமிரபரணியின் புனிதத்தன்மையினையும், நதிநீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி ஜெயந்தி ஆரத்தி பெருவிழா நாளை நடைபெறுகிறது.
- நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சின்னசங்கரன்கோவில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லுர் உள்ளிட்ட படித்துறைகளில் நடக்கிறது.
நெல்லை:
தாமிரபரணியின் புனிதத்தன்மையினையும், நதிநீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய சன்யாசினீஸ் சங்கம் சார்பில் அனைத்து சமய, சமுதாய அமைப்புகள், இயக்கங்கள் கலந்து கொள்ளும் தாமிரபரணி நதியின் ஜெயந்தி ஆரத்தி பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சின்னசங்கரன்கோவில், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லுர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்பூவனம், அரியநாயகிபுரம், சேரன்மகா தேவி, கரிசூழ்ந்தமங்கலம், மேலச்செவல், கோபால சமுத்திரம், கருப்பந்துறை, மேலநத்தம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், செப்பரை ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி, உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், ஆத்தூர், தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், முறப்பநாடு, சேர்ந்தபூமங்கலம், ஏரல், ஆழ்வார்திருநகரி, வாழவல்லான், சொக்கபனங்கரை, குரங்கணி, பால்குடி, வெள்ளூர், வல்லநாடு, சீவலப்பேரி, ரெட்டை திருப்பதி, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் நடக்கிறது.
- ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் சித்தூர் தேரடியில் இருந்து பஸ் நிலையம் வரை நடை பெற்றது. ஒரு முறை உபயோகிக்கும் நெகிழியை தவிர்போம் என்று கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்களின் வீடுகள், கடைகளில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. பேரணியில் தூய்மை காவலர், சுகாதார பணியாளர், ஊராட்சி செயலர் இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
- ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது.
ஏர்வாடி:
ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங் களில் சுவாமி அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதேபோல் களக்காடு கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவினை வெவ்வேறு சமூகத்தினரை சேர்ந்தவர்கள் மண்டகபடி செய்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
- நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- கயத்தாறு அருகே கடம்பூர், மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடியில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதியில் நேற்று மாலை திடீரென பயங்கர சூறைக்காற்று வீசத்தொடங்கியது. இதனால் சாலைகளில் புழுதி புயல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். தொடர்ந்து வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளை-திருவனந்தபுரம் சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. சந்திப்பு மீனாட்சிபுரத்தில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது. பாளையில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. கயத்தாறு அருகே கடம்பூர், மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. கோவில்பட்டியில் சுமார் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மணியாச்சியில் 29 மில்லிமீட்டரும், கடம்பூரில் 15 மில்லிமீட்டரும், கயத்தாறில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. திடீர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- புகையிலைக்கு எதிராக கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
ஆண்டுதோறும் மே 31-ந் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
உறுதிமொழி
இன்று உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து புகையிலைக்கு எதிராக கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
விழிப்புணர்வு பேரணி
பொதுசுகாதாரத்துறை சார்பில் பாளை லூர்துநாதன் சிலையில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை சுகாதார பணிகள் துறை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி, தெற்கு கடைவீதி வழியாக மாநகர காவல் கட்டுப்பாட்டுஅறை அலுவலகம் வரை சென்றது. புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும் வகையிலான கருப்பொருட்களை கையில் ஏந்தியபடியும், விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணி சென்றது.
புகையிலை ஒழிப்பு குறித்த முழக்கங்களை எழுப்பியபடி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆய்வக நுட்பனர் படிப்பு மேற்கொள்ளும் மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு துறை, நெஞ்சகநோய் துறை மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை டீன் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மனநலம்- போதை மறுவாழ்வுத்துறை தலைவர் ரமேஷ் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் புகையிலையின் கேடுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது.
களக்காடு:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார்.
நேற்று காலையில் நகைகள் வாங்குவதற்காக சுஷாந்த் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் புறப்பட்டார்.
நெல்லை அருகே மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென 2 கார்களில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் சுஷாந்த் காரை வழிமறித்து கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர். சுஷாந்த் சுதாரிப்பதற்குள் அவர் மீது மிளகாய் பொடியை தூவினர்.
தொடர்ந்து காருடன் அவரை கடத்திச்சென்ற அந்த கும்பல் அவரை நடுவழியில் இறக்கி விட்டனர். பின்னர் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தில் குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்திவிட்டு, அதில் வைத்திருந்த ரூ.1½ கோடி பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக சுஷாந்த் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 395, 397 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பிச்சென்ற முகமூடி கும்பலை பிடிக்க நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது. இதையடுத்து களக்காட்டிற்கு சென்று தனிப்படையினர் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சேரன்மகாதேவி சாலையில் கார் சென்றது.
தொடர்ந்து ஆய்வு செய்ததில், கார் சேரன்மகாதேவி, அம்பை வழியாக தென்காசியை கடந்து கடையநல்லூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற இடத்தை கண்டுபிடிக்க தனிப்படையினர் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த கும்பல் அங்கிருந்து கேரளாவிற்கு தப்பிச்சென்று இருக்கலாமா? அல்லது கேரளா செல்வது போல் போலீசாரை திசைதிருப்பிவிட்டு ராஜபாளையம், மதுரை வழியாக வேறு எங்கும் அந்த கும்பல் தப்பிச்சென்றதா? என தனிப்படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- இசக்கியப்பனுக்கும்,முருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
- காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் இசக்கியப்பன் (39). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இசக்கியப்பனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை தேடி வருகின்றனர்.
- டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன.
- பாட்டப்பத்து, அரசன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலையில் நடமாட அச்சப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனுக்கள் வந்தன.
இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் இன்று பிடிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பாட்டப்பத்து, அரசன்நகர், கிருஷ்ணபேரி, பெரியதெரு, நடுத்தெரு, குற்றாலம்ரோடு, ஆசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.






