என் மலர்
திருநெல்வேலி
- கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
- வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
நெல்லை:
பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஆலன் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
- உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
நெல்லை:
பாளை சீவலப்பேரி அருகே மேலபாலாடை பகுதியை சேர்ந்தவர் ஆலன் (வயது 23).
இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீவலப்பேரி போலீசார், ஆலன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணியிடத்தில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஆலன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சீவலப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த முருகேசன், இசக்கியப்பனை கம்பால் தாக்கினார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் கீழூர், நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 65). தொழிலாளி. நேற்று இவரது மாடுகள் கருங்கண்ணன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு (48) சொந்தமான தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை தேடி வருகின்றனர்.
- யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
- உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை:
தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முகநதி அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.
மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.
அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டது.
மேலும் அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் இருப்பதினாலும், அந்த வழித்தடம் அதன் பூர்வீக இடமான கேரளா வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதன் வழியாக அரிசி கொம்பன் கேரள மாநிலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மாவட்ட நீதிபதி சீனிவாசன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் வைத்து 500 மரக்கன்றுகள் வழங்குதல்-நடுதல் மற்றும் 500 துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார்.
மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சமீனா முன்னிலை வகி த்தார். வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன், கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் ஆகி யோர் மரக்கன்றுகள் வள ர்ப்பதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினர். தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நீதிமன்ற, நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள், பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்டது.
- கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
- மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கால்வாயில் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவ ட்டத்தில் பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால் அளித்த மனுவில், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்ப த்தினர் குடியிருந்து வருகி ன்றனர். இங்கே கடந்த 30 ஆண்டுகளாக குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. எனவே உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மணிமுத்தாறு பேரூரா ட்சியை சேர்ந்த 15-வது வார்டு கவுன்சிலர் கோட்டிமு த்து தலை மையில் அந்த பகுதி மக்கள் வந்து அளித்த மனுவில், பேரூராட்சியில் நிர்வாக சீர்கேடு அதிகமாக நடக்கி றது. எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலப்பாளையம்
மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், மேலப்பா ளையம் பகுதியில் பாளைய ங்கால்வாயில் மலக்கழிவுகள் நேரடியாக கலக்கிறது. மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நீர் நிலையை நச்சுகேடாக மாற்றி வருகின்றனர். எனவே இந்த நிலையை போக்கி பாளையங்கா ல்வாயில் கழிவுநீர் கலப்ப தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- பெட் சிட்டி ஸ்கேன் தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது.
- நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 கட்டிடங்கள் நாளை திறந்து வைக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.1.53 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழழ வள்ளியூரில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசினார். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை கண்டறியும் அதிநவீன ஸ்கேன் கருவியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளேன். பெட் சிட்டி ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்த ஸ்கேன் முறையானது தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது. இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து இந்த மாவட்டங்களின் பொதுமக்கள் நலன் கருதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 12 கோடியில் இந்த புதிய பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தொடங்கி வைக்க உள்ளேன்.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 708 நகர்புற சுகாதார மையங்களை காணொலி காட்சி வாயிலாக புதிய முறையில் தொடங்கி வைக்க உள்ளார். அதில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 22 கட்டிடங்களில் 10 கட்டிடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால் அவை நாளை திறந்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 24 பேர் பயணிக்க கூடிய சோலார் படகு தினமும் 8 முறை இயக்கப்பட்டது.
- படகின் சோலார் பேனல்கள் சேதமடைந்து நிறுத்தப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளை கவர சூரிய ஒளியில் இயங்கும் 450 வோல்ட் திறன் கொண்ட சோலார் படகு திட்டத்தை தமிழக அரசு 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2020-ம் ஆண்டு ஜனவரியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அதனை தொடங்கி வைத்தார்.
தினமும் ரூ.20 ஆயிரம் வருமானம்
24 பேர் பயணிக்க கூடிய சோலார் படகு தினமும் 8 முறை இயக்கப்பட்டது. படகில் பயணம் செய்ய பெரியவர்க ளுக்கு ரூ.110 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.55 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தினமும் இதன்மூலம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வனத்துறைக்கு வருமானம் கிடைத்தது. மேலும் மணி முத்தாறு அணைக்கட்டு, பூங்கா, அருவி என சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது.
2020-ம் ஆண்டு சுற்றுலா படகு தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே அது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக படகின் சோலார் பேனல்கள் சேத மடைந்து பராமரிப்பின்றி அணையில் ஓரம் நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் கோரிக்கை
இது குறித்து தற்போதைய புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், சுற்றுலா படகின் சோலார் பேனல்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன.
எனவே அதனை சரி செய்து தர அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்றார். எனினும் மீண்டும் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
- தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
- பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜிபிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் இந்த 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக நெல்லை மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது.
தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நவீன 4ஜி உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்குகிறது.
உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஆய்வுப் பிரிவான சென்டர் பார் டிப்பார்ட்மென்ட் ஆப் டெலிமேடிக்ஸ் மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.
உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 309 டவர்களும், 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்து டவர்களும 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு எளிதாக மாற்ற கூடவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படுத்தப்படுகிறது. மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். நெல்லை சமீபத்திய காலங்களில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து வருகிறது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்ட நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும் சேவையின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்க தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பி.எஸ்.என்.எல்.ன் இந்த மேம்பட்ட 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறம் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உப்பாத்து காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ் என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள உப்பாத்து காலனி பகுதியில் ஒரு இடத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 13 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முக்கூடல் அருகே மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ்(வயது 56) என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- பிரவின் ஜெயபால் மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மதியழகனுடன் தகராறு செய்துள்ளார்.
- காயம் அடைந்த மதியழகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வீ.கே. நகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜான் மகன் பிரவின் ஜெயபால் (23). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் அவர் மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மதியழகனுடன் தகராறு செய்துள்ளார்.
இதனை மதியழகன் கண்டித்ததால் அவர்களு க்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று மதியழகன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயபால் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த மதியழகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி ஜெய பாலை கைது செய்தனர்.
- பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை சீவலப்பேரி அருகே உள்ள தோணிக்கரையில் ஆர்.சி. மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அலெக்ஸ் ஜெரால்டு வேதநாயகம் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியின் அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






