search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறில் சோலார் படகு போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை
    X

    கரையில் நிறுத்தப்பட்டுள்ள சோலார் படகு.

    மணிமுத்தாறில் சோலார் படகு போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை

    • 24 பேர் பயணிக்க கூடிய சோலார் படகு தினமும் 8 முறை இயக்கப்பட்டது.
    • படகின் சோலார் பேனல்கள் சேதமடைந்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளை கவர சூரிய ஒளியில் இயங்கும் 450 வோல்ட் திறன் கொண்ட சோலார் படகு திட்டத்தை தமிழக அரசு 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2020-ம் ஆண்டு ஜனவரியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அதனை தொடங்கி வைத்தார்.

    தினமும் ரூ.20 ஆயிரம் வருமானம்

    24 பேர் பயணிக்க கூடிய சோலார் படகு தினமும் 8 முறை இயக்கப்பட்டது. படகில் பயணம் செய்ய பெரியவர்க ளுக்கு ரூ.110 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.55 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தினமும் இதன்மூலம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வனத்துறைக்கு வருமானம் கிடைத்தது. மேலும் மணி முத்தாறு அணைக்கட்டு, பூங்கா, அருவி என சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது.

    2020-ம் ஆண்டு சுற்றுலா படகு தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே அது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக படகின் சோலார் பேனல்கள் சேத மடைந்து பராமரிப்பின்றி அணையில் ஓரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் கோரிக்கை

    இது குறித்து தற்போதைய புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகபிரியா கூறுகையில், சுற்றுலா படகின் சோலார் பேனல்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன.

    எனவே அதனை சரி செய்து தர அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்றார். எனினும் மீண்டும் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×