என் மலர்
திருநெல்வேலி
- காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளியிடப்பட்டது.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளி யிடப்பட்டது.
அதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ராகுல்காந்தி, மோடி அரசின் பொய் பிம்பத்தை உடைத்து விட்டார். மோடிக்கும் அதா னிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்?
அதற்காக பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி யின் எம்.பி. பதவி பறிக்கப் பட்டது. எதையாவது செய்து ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகுல் காந்தியின் மீது மிகப்பெரிய பயத்தில் பா.ஜனதாவினர் உள்ளார்கள்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை இது போன்ற செயல்களை எல்லாம் செய்தவர்கள் தங்களை ராமராகவும், சுதந்திரம் பெற்ற முதல் இந்தியாவை கட்டமைத்த காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் ராவ ணனாக சித்தரிப்பது ஒரு கேலிக்கூத்து.
பா.ஜனதாவினர் மத அரசியல் செய்ய நினைக் கிறார்கள். ராகுல் காந்தி இந்துக்களின் எதிரி என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராகுல் காந்தி எல்லா கோவிலுக்கும் செல்கிறார். எல்லா மதத்தி னரையும் சந்திக்கிறார்.
இது போன்ற பொய் பித்தலாட்டமான கேலிச்சித்திரங்களை இந்திய மக்கள் நம்பமாட்டார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜனதா அரசு தோற்று ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், செல்ல பாண்டி, கக்கன், ராஜ கோபால், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், களக்காடு நகராட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஷேக், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், கவுன்சிலர் சிம்சன் துரை,
மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விபின், கட்சி நிர்வாகிகள் வில்சன், தங்கராஜ், முத்துராமலிங்கம், காமராஜ், அன்வர், பிரியா முருகன், லதா சிம்சன், ஸ்ரீதேவி, அருள், பாலன், பெருமாள், முருகன், பாஸ்கர், பாஸ்கரன், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் திசையன்விளையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலை மையில் திசையன்விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந் துள்ள கெட்டி மேளம் மகாலில் நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியா ஜெகதீஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று கர்ப்பிணி பெண்களுக்கு புடவை மற்றும் பரிசு பொரு ட்கள் வழங்க ப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக விழா முடிவுற்றதும் 7 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெ ண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பினும் வீட்டில் நடைபெறும் வளை காப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா சரவணகுமார், பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சூசை ரத்தினம், பஞ்ச வர்ணம் ஜெயகுமார், வளர்மதி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி, பால சுப்ரமணியம், திசை யன்விளை பேரூர் இளை ஞரணி அமைப்பாளர் நெல்சன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அனைச்சியார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவ்வலடி சரவணகுமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம்கிஷோர் பாண்டியன், பொற்கிழி நடராஜன், கிங்ஸ்டார் சேர்மதுரை, அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கோகுல், புளியடி குமார், முத்து, எழில் ஜோசப், சாகுல் ஹமீது, முத்தையா, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
வள்ளியூர்:
நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவ லகத்தில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசுகையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை நாட்களில் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணியில் இருந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்கு வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து தொடர் ஆய்வு பணிகளை நடத்தி வன விலங்குகளால் மின் பாதைகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமாகி இருந்தால் உடனடியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். வள்ளியூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
- தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
- மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் முத்துராஜ்(வயது 32). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2-ந்தேதியில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் நேற்று மதியம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தார். டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.14 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒட்டப்பிடாரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நெல்லையை அடுத்த தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
அதனை அப்படியே வைத்து விட்டு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பழங்கள் வாங்கிவிட்டு திரும்பவும் மோட்டார் சைக்கிள் அருகே வந்தார்.
அப்போது கவரில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சீதாலெட்சுமி வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
முத்துராஜ் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்தபோதில் இருந்து மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததும், அவர் பழக்கடைக்கு சென்றதை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- நெல்லையில் மாதத்திற்கு ஒரு முறை மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- இன்று 37 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் மனித உரிமைகள் மீறல் தொடர் பான வழக்குகள், மனித உரிமைகள் ஆணை யத்தால் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் மாதத்திற்கு ஒரு முறை மனித உரிமை கள் ஆணையத்தால் மனித உரிமைகள் மீறல் தொடர் பான வழக்குகள் விசாரிக் கப்பட்டு வருகிறது. கடைசி யாக கடந்த மாதம் 8-ந் தேதி இந்த விசாரணை நடை பெற்றது.
இந்த மாதத்திற்கான மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பி னர் கண்ணதாசன் கலந்து கொண்டு மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரித்தார்.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற உரிமை மீறல் வழக்குகள் விசாரணை நடந்தது.
இன்று 37 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப் பட்டது. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளே விசாரணைக்கு வந்திருந்த னர். இதனால் அரசு சுற்றுலா மாளிகையில் போலீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது.
- போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் சரோஜா ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் காளி முத்து தலைமையில் சுகா தார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உதவி பொறியாளர் முருகன் மேற்பார்வையில் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அது மட்டுமின்றிமேலும் 100-க்கும் மேற்பட்ட கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
- பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
- நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்ப தாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்டத்திற் குட்பட்ட, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை ரோடு, உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே, மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.
- வளைகாப்பு நிகழ்ச்சியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.
நெல்லை:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரிய தர்ஷினி, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திர சேகரன், செல்லபாண்டி, கக்கன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பால்பாண்டி, நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, கவுன்சிலர்கள் மீகா கண்ணன், வனிதா காமராஜ், படலையார் குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், சீவலப்பேரி பஞ்சா யத்து தலைவர் அய்யம்மாள், மகளிர் அணி வட்டார தலைவி பிரியா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டேனியல், வில்சன் , தங்கராஜ், வேலம்மாள், லதா மற்றும் குழந்தை நல பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளிகுளம் பஞ்சாயத்தில் 100 நாள் திட்ட பணி பொறுப்பாளராக சங்கரம்மாள் வேலை பார்த்து வருகிறார்.
- சிங்கபாண்டி, சங்கர் ஆகியோர் சேர்ந்து கனிதுரையை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் கனிதுரை (வயது45). இவர் கள்ளிகுளம் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார்.
அதே பஞ்சாயத்தில் 100 நாள் திட்ட பணி பொறுப்பா ளராக கள்ளிகுளத்தை சேர்ந்த வள்ளிநாயகம் மனைவி சங்கரம்மாள் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் பணி சம்பந்தமாக அடிக்கடி பேசியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சங்கரம்மாளின் உறவினர்கள் கனிதுரையிடம் இதுபற்றி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கனிதுரை கீழதுவரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கரம்மாளின் சகோதரர் சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த சிங்கபாண்டி (32), அவரது உறவினரான சங்கர் (31) ஆகியோர் கனிதுரையை வழி மறித்தனர்.
இதையடுத்து அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனைதொடர்ந்து அவரை சிங்கபாண்டி, சங்கர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 3 ½ பவுன் எடையுள்ள தங்க செயின், 9 கிராம் எடையுள்ள மோதிரம் ஆகியவற்றையும் பறித்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயம் அடைந்த கனிதுரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சிங்கபாண்டி, சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- 12-ந் தேதி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி நடைபெறுகிறது.
- 13-ந்தேதி 10-ம் திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கியது. முதல் திருவிழாவை தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கள்ளிகுளம் பிளாரிட்டி சமூக அலுவலகம் தேவராஜன், வடக்கன்குளம் ஜெபமாலை தூதுவர் சபை ஜான் பொஸ்கோ, ஆனைகுளம் பங்கு தந்தை லூர்துசாமி, பார்பரம்மாள்புரம் பங்கு தந்தை அமல்ராஜ், இளங்குளம் பங்கு தந்தை பிரான்சிஸ், சேசுசபை குரு வில்ப்ரட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
11-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருவிழா நடைபெறும். அதில் காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி மாலை 5 மணிக்கு திருச்செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி தொடர்ந்து மாலை ஆராதனை நடைபெறுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் திருவிழா காலை 6 மணிக்கு செபமாலை, திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி அதைத்தொடர்ந்து அன்னையின் கொடி இறக்கம் நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜேசுதுரை அடிகளார், உதவி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அன்பிய பொறுப்பாளர் குழு, பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.
- கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.
- அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொ றியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளது.
அதன் காரணமாக அந்தந்த துணை மின்நிலை யங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
அதன்படி ஓ. துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், வீரவ நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கல்லி டைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவ நல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோ வில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.
அதேபோல் மணிமுத்தாறு துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மணி முத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகள், கடையம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கடையம், பண்டாரகுளம், பொட்டல்பு தூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளி யம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநி யோகம் தடைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணகுடி
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பணகுடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணி களை செய்ய வேண்டும், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி லும் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜிலா சத்தியானந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வின்சென்ட் மணிதுரை, துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, கவுன்சிலர்கள் நித்ய பாலையா, சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டி யன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






