search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    களக்காட்டில் சமுதாய வளைகாப்பு விழா- கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்தபடம்.

    களக்காட்டில் சமுதாய வளைகாப்பு விழா- கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.
    • வளைகாப்பு நிகழ்ச்சியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நெல்லை:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிரிய தர்ஷினி, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திர சேகரன், செல்லபாண்டி, கக்கன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பால்பாண்டி, நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, கவுன்சிலர்கள் மீகா கண்ணன், வனிதா காமராஜ், படலையார் குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், சீவலப்பேரி பஞ்சா யத்து தலைவர் அய்யம்மாள், மகளிர் அணி வட்டார தலைவி பிரியா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டேனியல், வில்சன் , தங்கராஜ், வேலம்மாள், லதா மற்றும் குழந்தை நல பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×