என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • வடக்கு மீனவன் குளத்தில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
    • புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    நெல்லை:

    களக்காடு ஊராட்சி ஒன்றியம் கள்ளி குளம் ஊராட்சி வடக்கு மீனவன் குளத்தில் அன்னை தெரேசா உயர்நிலை பள்ளி முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப் படுத்தப்பட்டது.

    அந்த இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பாண்டி, கள்ளிகுளம் ஊராட்சி மன்ற துணை தலைவி முத்து லெட்சுமி, களக்காடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சைமன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணி, ஸ்ரீதேவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் மணிமுத்தாறு செல்லும் சாலையில் நடைபெற்றது.
    • மாரத்தான் நடைபயணத்தை பேரூராட்சி தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரைகொண்டாடப்படுவதை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் இன்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கோட்டவிளை தெரு, மணிமுத்தாறு செல்லும் சாலையில் பாப்பாங்குளம் முக்கவர் சாலை பஸ் நிறுத்தம் வரை நடைபயணம் நடைபெற்றது . பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலையில், தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாத்திமா, ஜானகி, பிரமாச்சி, ஜானகி, பெரிய செல்வி, மாலதி, ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, முத்துலட்சுமி, சையத் அலி பாத்திமா மற்றும் பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் தொடர்பான விழிப்புணர்வை பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்து நன்றி கூறினார்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் உள்ளது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் கருட சேவை விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடும்பத்தோடு மலைப் பாதையில் நடந்து கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. திருக்கு றுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனப் பகுதியில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதை யாறு வனச்சர கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசார் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார்.
    • காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள தளவாய்புரம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 30). இவரது மனைவி சீதாலெட்சுமி (26). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து முத்துகிருஷ்ணனின் தாயார் லெட்சுமி, சகோதரர் செல்வம், செல்வத்தின் மனைவி உமா ஆகியோரது தூண்டுதலின் பேரில் முத்துகிருஷ்ணன், சீதாலெட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக சீதா லெட்சுமியின் கணவர் முத்து கிருஷ்ணன், மாமியார் லெட்சுமி, செல்வம், உமா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கும்பல் பணகுடி அருகே வைத்து மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு கார்த்திக்கை காரில் கடத்தி சென்றது.

    இந்நிலையில் நேற்று மதியம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் அவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்த மதன்(23), கோபால சமுத்திரத்தை சேர்ந்த தளவாய்பாண்டி(23), மானூரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் சேர்ந்து அல்லல்காத்தான் என்ற கார்த்திக்கை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். அ.தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடையவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பிச்சை ராஜை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்று அவரது மனைவி பொன்செல்வி புலம்பி வந்துள்ளார். இதைக்கண்ட பிச்சை ராஜின் அண்ணன் மகன் மதன், தங்கை மகன் கார்த்திக் ஆகியோர் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது பிச்சை ராஜை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பார்ப்பதற்காக அவர்களது நண்பர் அல்லல்காத்தான் என்ற கார்த்திக் நாகர்கோவில் சென்றுள்ளதை மதனும், கார்த்திக்கும் அறிந்துள்ளனர்.

    இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திரும்பி வரும்போது அந்த நபரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் 2 பேரும் புறப்பட்டுள்ளனர். அப்போது மதன் தனது அக்காள் கணவரான கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தளவாய் பாண்டியையும் அழைத்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் பணகுடியில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.

    இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் கார்த்திக்குடன் வந்த பேச்சிமுத்து தப்பியோடி பணகுடி போலீசில் நடந்த சம்பவங்களை கூறியதன்பேரில் போலீசார் நான்குவழிச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை நேற்று ஆய்வு செய்தபோது தான் அவர்களுக்கு ஏர்வாடி பகுதியில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழத்திடியூரை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பணகுடியில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலை அருகே உள்ள பிலாக்கொட்டை பாறை பகுதியில் வந்த போது எதிரே வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

    இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையில் கிடந்தது.

    எனவே அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தலைதுண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சற்று தொலைவில் துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்தது. அதனை வைத்து நடத்திய தொடர் விசாரணையில் அவர் நேற்று காரில் கடத்தி செல்லப்பட்ட கார்த்திக் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார் உரிமையாளர் பிச்சைராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனேவே பிச்சை ராஜ் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நெல்லையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது.
    • 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆச்சிமடம் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நெல்லையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது. பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இந்த போட்டியை கலெக்டர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண், பெண் இருபாலருக்குமான போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 கிலோமீட்டர் தூரமும், பெண்கள் 5 கிலோமீட்டர் தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கிலோமீட்டர் தூரமும், பெண்கள் 5 கிலோமீட்டர் தூரமும் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது.

    தொடர்ந்து 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆச்சிமடம் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தடைந்தனர்.

    பெண்கள் 5 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செந்தூர் சாலையில் உள்ள சீனிவாச நகர் வரை சென்று திரும்பினர். மற்றொரு பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து கிருஷ்ணாபுரம் வரை 10 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தனர்.

    இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர். போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியை தொடர்ந்து அண்ணா விளையாட்டு மைதானம் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரையிலும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி மேலப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மேலப்பாளையம் மெயின் பஜார் பகுதியில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின் படியும் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகம் வழங்க நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற் பொறியாளர் சிதம்பரவடிவு , உதவி மின் பொறியாளர்கள் ரத்தினவேணி, கார்த்திக்குமார், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியின் நாட்டை காப்போம் கூட்டமைப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக தெருமுனை பிரசாரம் மற்றும் குடிமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.
    • தொடர்ந்து நாங்குநேரி அருகே உள்ள நடுக்காரங்காடு கிராமத்தில் காங்கிரஸ் பிரசார கலைப்பயண குழுவினர் பாடல்கள் பாடியும், நடனமாடியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பிரசாரம் செய்தனர்.

    வள்ளியூர்:

    காங்கிரஸ் கட்சியின் நாட்டை காப்போம் கூட்டமைப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக தெருமுனை பிரசாரம் மற்றும் குடிமை சமூகங்கள் முன்னெ டுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.

    இந்த பிரசார கலைப்பயணக்குழுவினர் வள்ளியூருக்கு வருகை தந்தனர். இக்குழுவினரை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே வரவேற்றனர். பின்னர் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முறியடிக்கவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தியும், சாதி, மத ரீதியான பாகுபாடுகளை களைந்து இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், டாக்டர் அம்பேத்கார் இயற்றிய அரசியலைப்பு சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை குறித்தும் கலைப்பயண குழுவினர் பரப்புரை செய்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ், மாவட்ட செயலாளர் கென்னடி, மக்கள் தமிழகம் கட்சி கபிலன், எஸ்.டி.பி.ஐ. கலந்தை மீராசா, முஸ்லீம் ஐக்கிய முன்னணி சித்திக் அஸீர் ரஹ்மான், அருட்தந்தையர்கள் ஞானப்பிர காசம், பெனடிக், பால்பி ரிட்டோ, வள்ளியூர் சசி உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் பொன்பாண்டி நன்றி கூறினார்.

    தொடர்ந்து நாங்குநேரி அருகே உள்ள நடுக்காரங்காடு கிராமத்தில் காங்கிரஸ் பிரசார கலைப்பயண குழுவினர் பாடல்கள் பாடியும், நடனமாடியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பிரசாரம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பா ளர் சசிகுமார், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் செல்வராஜ், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் பால சுப்பிரமணியன், நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைகண்ணு, விவசாய அணி மாநில செயலாளர் வில்ப்ரட், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜெபஸ்டின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்ப தற்காக புதிய கண்டுபிடிப்பு, திட்ட மாதிரிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் சிறு, குறு தொழில் துறை இணை இயக்குநர் சிமியோன் (நெல்லை-மதுரை) டாடா பவர்-எனர்ஜி நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி அனுபாமா ரட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

    இதனையடுத்து பொதுமேலாளர் ஜெயக்குமார், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி ஆகியோர் மாணவர்கள் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேசினர். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.இதனையடுத்து, கல்லூரி அரங்கில் பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த படைப்புகள், கண்டு பிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கண்காட்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பொது மேலாளர் கிருஷ்ணகுமார், டாடா தொழில்நுட்ப தலைமை அதிகாரி ஸ்டீபன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் பூபாலராயன், அப்ளைய்ட் ஆய்வக பொறுப்பா ளர் பேரா சிரியர் லட்சுமிநாராயணன், ஐ.டி. துறை தலைவர் சஜிலின் ரோலட், பேராசிரியர் டேவிட் ஐ லிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி.
    • சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி யான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானுமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போ ட்டார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக நாங்குநேரி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி மீது தீ வைத்து அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×