என் மலர்
நீங்கள் தேடியது "Congress art tour campaign"
- காங்கிரஸ் கட்சியின் நாட்டை காப்போம் கூட்டமைப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக தெருமுனை பிரசாரம் மற்றும் குடிமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.
- தொடர்ந்து நாங்குநேரி அருகே உள்ள நடுக்காரங்காடு கிராமத்தில் காங்கிரஸ் பிரசார கலைப்பயண குழுவினர் பாடல்கள் பாடியும், நடனமாடியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பிரசாரம் செய்தனர்.
வள்ளியூர்:
காங்கிரஸ் கட்சியின் நாட்டை காப்போம் கூட்டமைப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக தெருமுனை பிரசாரம் மற்றும் குடிமை சமூகங்கள் முன்னெ டுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.
இந்த பிரசார கலைப்பயணக்குழுவினர் வள்ளியூருக்கு வருகை தந்தனர். இக்குழுவினரை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே வரவேற்றனர். பின்னர் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முறியடிக்கவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தியும், சாதி, மத ரீதியான பாகுபாடுகளை களைந்து இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், டாக்டர் அம்பேத்கார் இயற்றிய அரசியலைப்பு சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை குறித்தும் கலைப்பயண குழுவினர் பரப்புரை செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ், மாவட்ட செயலாளர் கென்னடி, மக்கள் தமிழகம் கட்சி கபிலன், எஸ்.டி.பி.ஐ. கலந்தை மீராசா, முஸ்லீம் ஐக்கிய முன்னணி சித்திக் அஸீர் ரஹ்மான், அருட்தந்தையர்கள் ஞானப்பிர காசம், பெனடிக், பால்பி ரிட்டோ, வள்ளியூர் சசி உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் பொன்பாண்டி நன்றி கூறினார்.
தொடர்ந்து நாங்குநேரி அருகே உள்ள நடுக்காரங்காடு கிராமத்தில் காங்கிரஸ் பிரசார கலைப்பயண குழுவினர் பாடல்கள் பாடியும், நடனமாடியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பிரசாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பா ளர் சசிகுமார், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் செல்வராஜ், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் பால சுப்பிரமணியன், நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைகண்ணு, விவசாய அணி மாநில செயலாளர் வில்ப்ரட், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜெபஸ்டின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






